மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆ.. என்னதிது.. ஜெ. மீது திடீரென இம்புட்டு பாசத்தைப் பொழிகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. மீது திடீரென இம்புட்டு பாசத்தைப் பொழிகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!-வீடியோ

    மதுரை: ஜெயலலிதாவை பொறுத்தவரை நான் அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன், ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக மட்டும் தான் விமர்சித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் ஒருமையிலும் இதுவரை விமர்சித்ததே கிடையாது. நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பற்றி மிகப் பெரிய மரியாதை உள்ளது என்று ஜெயலலிதா புகழ் பாடியுள்ளார் தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

    ஈரோடு தொடங்கி ஒவ்வொரு தொகுதியாக தேடி கடைசியில் தேனியில் வந்து நிற்கிறார் இளங்கோவன். இங்கு அவர் வெல்வாரா என்பது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தேனி அதிமுகவின் கோட்டை என்பதால்.

    அதிலும் தற்போது தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் தினகரன் பக்கம் அணி வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. தேனியில் தினகரனுக்கும் தனி செல்வாக்கு உண்டு. எனவே வாக்குகள் அதிமுக, அமமுக பக்கம் பிரியப் போகிறது. இந்த கேப்பில் புகுந்து வென்று விட வேண்டும் என்பதே காங்கிரஸின் திட்டமாக உள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் பிளவால் அப்செட்டாகிக் கிடக்கும் ஜெயலலிதா விசுவாசிகளை டச் செய்வது போல பேசியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    ஓபிஎஸ்சுக்கும் , அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. தங்க தமிழ்செல்வன் சாபம் ஓபிஎஸ்சுக்கும் , அவரது மகனுக்கும் தேனி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. தங்க தமிழ்செல்வன் சாபம்

    பெரிய போட்டி இல்லை

    பெரிய போட்டி இல்லை

    தேனி தொகுதியை நான் பெரிய போட்டியாக கருதவில்லை. தேனி மக்களை பொறுத்தவரை பிஜேபி ஆட்சியின் மூலம் பல கஷ்டங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக பிஜேபி கட்சிகள் கூட்டணியை தோற்கடிக்க முடிவெடுத்துள்ளார்கள் அனைவரும் அறிந்ததே. ஆகவே நான் கண்டிப்பாக தேனி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன்.

    என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

    ஈரோட்டில் தொடங்கி

    ஈரோட்டில் தொடங்கி

    காங்கிரஸ் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மிக உற்சாகமாக இருக்கின்றார்கள். நான் ஈரோடு திருப்பூரில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தோழமைக் கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் அமைந்ததால் காங்கிரஸ் தலைமையானது என்னை தேனி தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொண்டனர்.

    மக்கள் ஆதரவு உண்டு

    மக்கள் ஆதரவு உண்டு

    எனக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது இறுக்கமானது. அதனால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கான ஆதரவு மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேனி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை என கருதுபவர்களுக்கு அதைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை.

    மரியாதை இருக்கு

    மரியாதை இருக்கு

    ஆனால் ஜெயலலிதாவை பொறுத்தவரை நான் அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக மட்டும் தான் விமர்சித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் ஒருமையிலும் இதுவரை விமர்சித்ததே கிடையாது. ஒருமுறை அவர் சோனியா காந்தியை விமர்சித்த போது தான் நான் ஜெயலலிதாவை சோனியா காந்திக்கு ஆதரவாக விமர்சித்தேன்.என்னைப் பொறுத்தவரையில் அரசியலில் அவரை நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பற்றி மிகப் பெரிய மரியாதை உள்ளது.

    சுயமான சிந்தனை

    சுயமான சிந்தனை


    எங்களுடைய குடும்பத்தைப் பொருத்தவரையில் அரசில் பல்வேறு கட்சி சார்ந்து இருந்தாலும் வேறுபாடுகள் இருந்தாலும் அதை எங்களுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கவில்லை. அவரவருக்கு சுதந்திரமாக சுயமாக சிந்திக்கும் உரிமை உண்டு. இந்திரா காந்தி ஆட்சியின் போது அவருடைய செயல்பாடுகளில் ஈர்ப்பு இருந்ததால் தான் என்னை காங்கிரஸில் இணைத்து கொண்டது அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸில் தொடர்ந்துள்ளேன்.

    அருமைத் தம்பி ஓபிஎஸ்

    அருமைத் தம்பி ஓபிஎஸ்

    என் அருமை தம்பி ஓ.பன்னீர்செல்வம் அவருடைய மகன் தேனி மாவட்ட அதிமுக வேட்பாளராக உள்ள ரவீந்திரநாத் குமார் எனக்கு தேனி மக்களையும் அங்கு நடக்கும் பஞ்சாயத்துக்கள் எதுவுமே தெரியாது என்று விமர்சித்துள்ளார். எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் கட்டப்பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன்., தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன.

    கட்டப் பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்

    கட்டப் பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்

    வைகையில் தூர்வாரும் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது. அது மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தில் சுற்றுலா மையமாக மிக மிகச் சிறப்பாக மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது, இது போன்ற காரியங்களில் தான் என்னை ஈடுபட்டு கொள்வேனே தவிர மற்ற எந்த வித பஞ்சாயத்திலும் ஈடுபட மாட்டேன்.

    மிகச் சிறப்பாக

    மிகச் சிறப்பாக

    என் தொகுதியில் மக்கள் எதிர்பார்ப்பதை விட மிக சிறப்பாக செய்வேன். நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் சரி வேறு பல மத்திய அரசு திட்டங்கள் ஆக இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பாக இருக்கும். விவசாய நிலங்கள் பாதிப்படையும் திட்டமாக இருப்பின் அவற்றை தடுப்பேன் என்று தெரிவித்தார்

    விசுவாசிகளுக்கு வலை

    விசுவாசிகளுக்கு வலை

    அதிமுக, அமமுக பிளவால் துவண்டு கிடக்கும் ஜெயலலிதா விசுவாசிகளை கவர் செய்வது போல இளங்கோவன் பேசியுள்ளதாக கருதப்படுகிறது. எனவே அந்த வாக்குகளில் கணிசமானதை தன் பக்கம் இழுக்க இளங்கோவன் பிட்டு போடுகிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதெல்லாம் நடக்குமா.. அரசியலில் எல்லாமே சாதாரணமப்பா.

    English summary
    Congress's Theni candidate EVKS Elangovan has said that he has high regards on late ADMK leader Jayalalitha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X