மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேஸ்புக்கில் அமுதா.. நேரில் பார்த்த போது முருகனாக மாறியதால் அதிர்ச்சி.. கடைசியில் நடந்தது ஒரு கொலை

Google Oneindia Tamil News

மதுரை: பேஸ்புக் மூலம் பெண் குரலில் பேசி காதலிப்பதாக கூறி ஏமாற்றியது மட்டுமல்லாமல் ஓரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிப்பட்ட நிலையில் அந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலக்கரந்தை சுடுகாட்டு அருகில் உள்ள காட்டில் கடந்த 15 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடப்பதால் அவ்வழியே ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் மாசார்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது? டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்து கிடந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

மதுபாட்டில்

மதுபாட்டில்

விசாரணையில் இறந்தவர் கோவில்பட்டியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் முருகன் (28) என்பது தெரியவந்தது. அவரது சடலத்திற்கு அருகில் மதுபாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கண்டெடுத்தனர். முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்திருந்தனர் போலீஸார்.

சந்தேக மரணம்

சந்தேக மரணம்


இந்த கொலையை சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குறித்து எட்டயபுரம் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் சடலமாக இருந்த முருகனுடன் ஒரு நபர் சென்றது தெரியவந்தது. மேலும் முருகன் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர்.

அடிக்கடி போன்

அடிக்கடி போன்

ஒரு நம்பரில் இருந்து முருகன் போனுக்கு அடிக்கடி போன் வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்த போது அந்த நம்பர் காஞ்சிபுரம் மாவட்ட தாமல் பகுதியைச் சேர்ந்த மாயண்டியின் மகன் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் முருகன் (24) குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலை நடந்த இடத்திற்கு நேற்று காஞ்சிபுரம் முருகன் சம்பவ இடத்தில் பர்ஸை விட்டு சென்றதால் அதை எடுக்க வந்த போது கைது செய்யப்பட்டார்.

விசாரணை

விசாரணை


இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது முருகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். விசாரணையில் கொலைக்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் காஞ்சிபுரம் முருகனிடம் பேஸ்புக்கில் தான் ஒரு பெண் என்றும் தனது பெயர் அமுதா என்றும் கூறிய தூத்துக்குடி முருகன் பேசியுள்ளார்.

இரு முருகன்களுக்கு காதல்

இரு முருகன்களுக்கு காதல்

மேலும் இரு ஆண்டுகளாக அமுதா என்ற பெயரில் இரு முருகன்களும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் அன்று இருவரும் சந்தித்த போதுதான் அமுதா என்ற பெயரில் பேசியது தூத்துக்குடியை சேர்ந்த ஆண் அவரது பெயரும் முருகன் என்பது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கட்டாயப்படுத்திய முருகன்

கட்டாயப்படுத்திய முருகன்

அப்போது காஞ்சிபுரம் முருகனை தூத்துக்குடி முருகன் கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கை செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை அழிப்பதற்காக தூத்துக்குடிக்கு காஞ்சிபுரம் முருகன் சென்றார். அப்போது இருவரும் மேலக்கரந்தை பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் மதுவில் விஷம் கலந்ததில் தூத்துக்குடி முருகன் இறந்துள்ளார். இதையடுத்து அவரது தலையில் கல்லை போட்டு காஞ்சிபுரம் முருகன் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

English summary
Facebook user uses female voice and threaten with a video results in murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X