Just In
தமிழகத்தில் அரசு மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி!
மதுரை: தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி மருத்துவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது.
தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி பணிகள் ஸ்டார்ட்.. முதல் ஊசி போட்டுக்கொண்டார் டாக்டர் செந்தில்!
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அது போல் தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த படியே 166 மையங்களிலும் காணொலி காட்சி மூலம் தடுப்பூசி போடும் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். மருத்துவ சங்க மாநிலத் தலைவராகவும் உள்ளார் செந்தில்.
