மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா!. அப்படி பிடி.. இப்படி பிடி… மீன்பிடி திருவிழாவில் கரைபுரண்டு ஓடிய உற்சாகம்

Google Oneindia Tamil News

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

வெள்ளரிப்பட்டியில் உள்ள வெள்ளரி கண்மாயில் பல ஆண்டுகளாக பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது.

Fishing Festival near Madurai: Agriculture will flourish Must Rain Shower

மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி திருவிழாவில் முத்துப்பட்டி, கள்ளந்திரி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சின்னாலே பாலியல் வக்கிரம்தானா?.. ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா! பொள்ளாச்சின்னாலே பாலியல் வக்கிரம்தானா?.. ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா!

பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என கண்மாய்க்குள் இறங்கி வலை விரித்து மீன்களை பிடித்தனர். இதில், கட்லா, குழுவை போன்ற ஏராளமான மீன்களை மகிழ்ச்சியோடு பிடித்தனர்.

விழாவில் கலந்து கொள்ள, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், பிடிப்பட்ட மீனை இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். ஒருபுறம் தேர்தல் திருவிழா களை கட்ட, மறுபுறம் மீன்பிடி திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

இதே போல், கடந்த வாரம் மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே உள்ள கீழகள்ளந்திரி கிராமத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முத்தன்சாமி கோயிலுக்கு சொந்தமான பெரியநாகினி கண்மாயில் மீன்களை பிடித்து மக்கள் மகிழ்ந்தனர்.

English summary
Enthusiasm overflows In Fishing Festival near Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X