மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளாஷ் பேக் 2020: வைகையில் இறங்க வராத கள்ளழகர்... காத்திருக்கும் மதுரை மக்கள்

வைகையில் இறங்க வராத கள்ளழகருக்காக மதுரை மக்கள் காத்திருக்கின்றனர். மதுரையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறாமல் போனாலும் ஆன்லைனில் சாமி தரிசனம் கிடைத்ததே என்று ஆறுதல் பட்டுக்கொண்டிருக்

Google Oneindia Tamil News

மதுரை: 2020ஆம் ஆண்டு மறக்கமுடியாத பல சம்பவங்களை நமக்கு விட்டு விட்டு சென்று விட்டு சென்று விட்டது. முக்கியமானது மதுரையில் நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடத்த முடியாத அளவிற்கு கொரோனா லாக்டவுன் முடக்கப் போட்டு விட்டது. மதுரையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா எப்படி நடந்தது என்று சின்னதாக ஒரு பிளாஷ் பேக் பார்க்கலாம்.

சித்திரை திருவிழா வரப்போகுது என்றாலோ மதுரையில் பங்குனியிலேயே களைகட்டும். பந்தக்கால் ஊன்றுவது முதல் திருவிழா ஏற்பாடுகளை செய்வது வரைக்கு என்னென்ன செய்வது என்று கூட்டம் போட்டு முடிவு செய்து அறிவித்து விடுவார்கள்.
இந்த ஆண்டு எதற்கும் வழியில்லாமல் போய் விட்டது காரணம் கொரோனா.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனாவிற்கு பிறந்தநாளே கொண்டாடி விட்டனர். இந்தியாவில் பிப்ரவரியில் ஊடுருவி மார்ச் மாதத்தில் பற்றி இப்போது இந்தியா முழுவதும் 90 லட்சம் பேரை தொட்டுப்பார்த்துள்ளது கொரோனா. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

சாமி தரிசனம் ரத்து

சாமி தரிசனம் ரத்து

கோவில்களில் சாமிக்கு மட்டும் தினசரி கைங்கரியங்களான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றாலும் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சித்திரை திருவிழாவை எப்படி நடத்துவது? மீனாட்சி திருக்கல்யாணத்திலும், கள்ளழகர் வைகை ஆற்றும் இறங்கும் வைபவத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்களே அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்தனர் கோவில் நிர்வாகிகள்.

மீனாட்சி திருக்கல்யாணம்

மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் கோவிலுக்குள் பக்தர்கள் பங்கேற்பு இன்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆன்லைனில் ஒளிபரப்பியதை வீட்டில் இருந்து பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர் பெண்கள். திருமண விருந்து ரத்து செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற சித்திரை தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வருத்தமடைந்தனர்.

கள்ளழகர் வரலையே

கள்ளழகர் வரலையே

தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் காணவும் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரவும் ஆண்டு தோறும் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு வருவார் கள்ளழகர். இந்த ஆண்டு கள்ளழகரையும் கட்டிப்போட்டு விட்டது கொரோனா. எல்லா வைபவங்களும் கோவிலுக்குள்ளேயே நடந்து விட்டது.

கள்ளழகர் எதிர்சேவை

கள்ளழகர் எதிர்சேவை

மதுரைக்கு வரும் கள்ளழகரை மூன்று மாவடி அருகே விடிய விடிய காத்திருந்து எதிர்கொண்டு அழைப்பார்கள் பக்தர்கள். இந்த ஆண்டு கள்ளழகருக்காக பக்தர்கள் காத்திருந்தும் அவர்தான் வர முடியாமல் போய்விட்டது. அழகரை பார்க்க முடியலையே என்று ஏங்கித்தான் போய்விட்டனர் மதுரைவாசிகள்.

முனிவருக்கு சாப விமோசனம்

முனிவருக்கு சாப விமோசனம்

அழகர் கோவிலில் தொட்டி அமைத்து அந்த தொட்டிக்குள் தங்க குதிரை வாகனத்தில் ஏறி கள்ளழகர் கால் வைத்தார். தன்னை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்தார் கள்ளழகர். இந்த ஆண்டு வைகையில் அவர் பாதம் படவேயில்லை.

2020ல் சித்திரை திருவிழா

2020ல் சித்திரை திருவிழா

மதுரையில் சித்திரை திருவிழாவை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள். இந்த ஆண்டு திருவிழா வந்த சுவடு தெரியாமல் கோவிலுக்குள் நடந்து முடிந்து விட்டது. பக்தர்களுக்கு கள்ளழகரின் தரிசனம் நேரில் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்ட பக்தர்களுக்கு ஆறுதலாக ஆன்லைனில் தரிசனம் கிடைத்தது.

English summary
The year 2020 has left us with many memorable events. Importantly, the world-famous Chithirai Festival in Madurai has been paralyzed by the Corona Lockdown to such an extent that it could not be held this year. Here is a flashback to how this year's Chithrai Festival in Madurai came to be.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X