மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாப்ளை ஆத்துல வெள்ளம்டா.. கிளம்பி வாங்கடா.. இரு கரை தொட்டு ஓடும் வைகை.. மதுரையில் உற்சாகம்!

வைகை கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: 8 வருஷம் ஆச்சு இப்படி பார்த்து... என்று வைகை ஆற்றில் சீறிப் பாய்ந்து ஓடும் வெள்ளத்தை மக்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்கள்.

தமிழக ஆறுகளிலேயே ரொம்ப வித்தியாசமானது இந்த வைகை. எப்போது வெள்ளம் வரும் என்றே தெரியாது. மாநிலமெங்கும் ஆறுகள் நிறைந்து வழிந்தோடினாலும் வைகை அது பாட்டுக்கு அமைதியாக இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான ஆறு வைகை. அது கரை புரண்டு ஓடினால் மதுரைக்கு அதுதான் திருவிழா!

இந்த நிலையில், தற்போது வைகை ஆற்றில் நீர் இரு கரை தொட்டி ஓடி வருகிறது மதுரையில். எல்லாத்துக்கும் காரணம் இந்த கஜா புயல்தான். புயல் காரணமாக மதுரையில் வைகை நீர்ப்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்ததால், வைகை அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டது.

சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் கொள்ளை.. காவலாளிக்கு போலீஸ் வலை சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் கொள்ளை.. காவலாளிக்கு போலீஸ் வலை

 கரைபுரண்டு வெள்ளம்

கரைபுரண்டு வெள்ளம்

இது மட்டுமில்லாமல் மஞ்சளாறு மற்றும் வரதமாநதி ஆற்றிலிருந்து கூடுதலாக 9,000 கன அடி தண்ணீரும் வைகையில் வந்து தெறித்து கொட்டியது. அதனால் நேற்றிலிருந்தே வைகையில் நீர் கரைபுரண்டு ஓட தொடங்கிவிட்டது.

 8 வருஷம் ஆகிவிட்டது

8 வருஷம் ஆகிவிட்டது

இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஓடுகிறது. மதுரை மக்கள் குஷியாகி கூட்டம் கூட்டமாக வந்து வைகையை வேடிக்கை பார்த்து வருகின்றனர். காரணம், இப்படி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 8 வருஷத்திற்கும் மேலாகி விட்டதாம், 2010-ல்தான் இப்படி ஒரு வெள்ளத்தை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதற்கு பிறகு வெள்ளம், மழை என்றெல்லாம் பேசப்பட்டதே தவிர, வைகை ஆற்றை எதுவும் திரும்பி பார்க்கவில்லை.

சிம்மக்கல் தரைப்பாலம்

சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கி கிடப்பதை கண்டு பூரித்து போய் ஆளாளுக்கு செல்போனை கொண்டு வந்து படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் போலீசார் யாரையுமே கிட்ட போய் பார்க்க அனுமதிக்கவில்லை. முதல்வேலையாக தரைப்பாலத்துக்கு சீல் வைத்துவிட்டார்கள்.

கண்காணிப்பு பணிகள்

அந்த வழியாக வரும் வாகனங்களை எல்லாம் தடுத்து நிறுத்திவிட்டனர். மதுரை மக்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று போலீசார் ஆற்றின் இரு கரை பகுதிகளிலும் நின்று கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.

அமைச்சர் ஆலோசனை

இந்த நிலையில், வைகை ஆற்றில் வெள்ளம் என்பதால் அமைச்சர் செல்லூர் ராஜூ, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளம் காரணமாக மாவட்ட மக்களின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 தடுப்பு வேலிகள்

தடுப்பு வேலிகள்

இதனிடையே மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் நீர்பிடிப்பு பகுதிகளுக்கே வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரு கரைகளிலும் தடுப்பு வேலிகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். வெள்ளம் கட்டுக்கடுங்காமல் ஓடுவதால், கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Flood Warning areas near Madurai Vaigai River
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X