மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நள்ளிரவு 12 மணி முதல் மதுரையில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு.. பொருட்களை வாங்க குவிந்த கூட்டம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் ஜூன் 24ம் தேதி அதிகாலை 12 மணி (ஜூன் 23 நள்ளிரவு) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 7 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

Recommended Video

    7 நாட்கள் முழு லாக்டவுன் அமல் - முடங்கியது மதுரை

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மதுரையிலும், இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளதாக, திங்கள்கிழமையான நேற்றுமுன்தினம் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    உலகில் கொரோனா பாதிப்பு 91லட்சத்தை தாண்டியது.. மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்.. விவரம்உலகில் கொரோனா பாதிப்பு 91லட்சத்தை தாண்டியது.. மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்.. விவரம்

    ஊரடங்கு பகுதிகள்

    ஊரடங்கு பகுதிகள்

    மதுரை மாநகராட்சி பகுதி, பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மேற்கு ஊரகப் பகுதிகள், திருப்பரங்குன்றம் பகுதிகளில் மொத்தம் 7 நாட்களுக்கு, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இயங்க அனுமதி

    இயங்க அனுமதி

    மருத்துவமனை, மெடிக்கல்கள், ஆம்புலன்ஸ் சேவை போன்ற அத்தியாவசிய சேவைகள், கட்டுபாடுகளின்றி இயங்கும். அவசர மருத்துவ உதவிக்கு உரிய ஆவணங்களுடன் பயன்படுத்தி கொள்ளலாம். இ-பாஸ் உள்ளவர்களை ரயில்நிலையம் மற்றும் விமானநிலையத்திற்கு அழைத்து செல்ல அனுமதி உள்ளது. விமான நிலையம், ரயில் நிலையங்களுக்கு சென்று திரும்பும் ப்ரீபெய்டு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆட்டோ, கால்டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதிகபட்சமாக, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே மக்கள் நடந்து சென்று அத்தியவாசிய பொருட்களை வாங்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியேற கட்டுபாடு விதிக்கப்படும்.

    பால், தண்ணீர் வசதிகள்

    பால், தண்ணீர் வசதிகள்

    மத்திய, மாநில அரசு அலுவலங்கங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். ஆனால், கட்டுபடுத்த பகுதிகளிலிருந்து ஊழியர்கள் பணிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்கூட்டியே அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்தால், கட்டுமான பணிகளுக்கு அனுமதி உண்டு. சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்துறை, கருவூலத்துறை, ஆவின், குடிநீர் ஆகியவை முழு அளவில் செயல்பட அனுமதி.

    காய்கறி

    காய்கறி

    காய்கறி கடை, மளிகை கடை பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். ஹோட்டல்களில், காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் வேலை செய்யலாம். டீ கடைகளுக்கு அனுமதி இல்லை. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அதற்கு பதில், அங்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்படும்.

    இ பாஸ்

    இ பாஸ்

    அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். தன்னர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அரசு அனுமதி பெற்றே மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு அனுமதி உள்ளது. நீதிமன்றம் செயல்படலாம். மதுரையிலிருந்து, இ-பாஸ் வசதி திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத்திற்கு மட்டுமே வழங்கபடும்.

    கடைசி நேர கூட்டம்

    கடைசி நேர கூட்டம்

    இந்தநிலையில், நேற்று கடைகள், சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றவில்லை. முகக் கவசம் அணிவதையும் பலரும் ஏனோதானோ என்று பின்பற்றினர். காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி, பரவை மார்க்கெட்கள் இன்று முதல் இயங்காது. மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளையில் பிரச்சினை இருக்காது.

    English summary
    Full lockdown will be in force for 7 days from June 23 midnight to 30 June at Madurai. During this curfew, it was stated that what works and what doesn't work.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X