மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு கலெக்டர் ஆபிசுக்கு கையில் மனுவோடு வந்த கணேசன்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரை வழிபடவும், கொரோனாவை விரட்டிட யாக பூஜை செய்யவும் மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Google Oneindia Tamil News

மதுரை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளில் கொரோனாவை விரட்ட யாகம் வளர்க்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் வேடம் போட்டு கையில் மனுவோடு வந்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Recommended Video

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு கலெக்டர் ஆபிசுக்கு கையில் மனுவோடு வந்த கணேசன்

    ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Ganesan came to the Collectors Office with a petition permission to Ganesha Chaturthi

    பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கும் தடையுள்ளதால் கோயில்கள் திறக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் உள்ள சிறு, சிறு கோயில்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் ஊரடங்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ராமரை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேச காங்கிரஸ்...ஒதுங்கிய டெல்லி!!ராமரை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேச காங்கிரஸ்...ஒதுங்கிய டெல்லி!!

    இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி சார்பில் மதுரை மாவட்ட தலைவர் எஸ்.அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அம்மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரை வழிபடவும், கொரோனாவை விரட்டிட யாக பூஜை செய்யவும் மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    English summary
    Hindu Munnai persons gave petitions District Collector seeking permission to develop a yajna to expel the corona on the day of Ganesha Chaturthi as it is prohibited to celebrate Ganesha Chaturthi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X