மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்னல் வேகத்தில் பறி போன சிறுமியின் உயிர்.. பதை பதைத்துப் போன மதுரை!

Google Oneindia Tamil News

Recommended Video

    மின்னல் வேகத்தில் பறி போன சிறுமியின் உயிர்.. பதை பதைத்துப் போன மதுரை!

    மதுரை: மதுரை வலையங்குளம் பகுதியில் சரக்கு லாரி மோதியதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் கோபமடைந்த மக்கள் நான்கு வழிச் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் திவ்யா(13). இவர் பெருங்குடியில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்றுவரும் இந்நிலையில் நேற்று காலையில் தனது தந்தை நடத்திவரும் பெயிண்ட் கடைக்கு செல்வதற்காக டிவிஎஸ் XL இருசக்கர வாகனத்தில் பெருங்குடி - திருமங்கலம் பைபாஸில் சென்றார்.

    girl killed in a flash accident near madurai

    அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி திவ்யா மீது மோதியதில் தரதரவென திவ்யா சுமார் 500 மீட்டருக்கும் மேலாக இழுத்துச் சென்றதால் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி சென்ற டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் திவ்யாவின் உறவினர்கள் வலையங்குளம் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    500 க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டநர். திவ்யாவை மோதி சென்ற லாரியை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற பல்வேறு விபத்துகள் இந்த பகுதியில் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வேகக்கட்டுப்பாட்டு தடையும் எதுவும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து பகுதியில் விபத்துகளை குறைக்கும் பாலம் கட்டி தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலம் கோரி பல்வேறு முறை கோரிக்கை மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் இடத்திலும் நெடுஞ்சாலை துறை யிலும் கொடுத்ததாகவும் தற்போது வரையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்று கூறுகின்றனர்.

    English summary
    A 13 year old girl was killed in a flash accident near Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X