மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோகுல்ராஜ் கொலை.. சிசிடிவியில் உள்ளது நான் இல்லை..வாக்குமூலம் அளித்த சுவாதி..அடுத்து நடந்த ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சுவாதி கண் கலங்கியவாறே வாக்குமூலம் அளித்தார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் சுவாதி கூறினார். சிசிடிவி காட்சியில் இருப்பது தான் இல்லை என்று சுவாதி கூறிய போது, உண்மையை மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் கேட்கவே கண் கலங்கினார் சுவாதி.

ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு வெகு நேரம் ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடினர்.

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்தும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவே சில மாதங்கள் ஆனது காவல்துறைக்கு. கொலை வழக்கை விசாரித்த அதிகாரி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார்.

ஜாதிவெறியால் கோகுல்ராஜ் கொலை: பிறழ்சாட்சியான சுவாதியை ஆஜர்படுத்த கோர்ட் அதிரடி உத்தரவு! ஜாதிவெறியால் கோகுல்ராஜ் கொலை: பிறழ்சாட்சியான சுவாதியை ஆஜர்படுத்த கோர்ட் அதிரடி உத்தரவு!

யுவாராஜ்

யுவாராஜ்

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்தும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவே சில மாதங்கள் ஆனது காவல்துறைக்கு. கொலை வழக்கை விசாரித்த அதிகாரி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார்.

17 பேர் மீது வழக்குப் பதிவு

17 பேர் மீது வழக்குப் பதிவு

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்ததாகச் சொல்லப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது.

யுவராஜ் திமிர்

யுவராஜ் திமிர்

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் அந்த பேச்சுக்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் யுவராஜ். தலைமறைவாக இருந்தாலும் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் அவரது பேட்டி வெளியானது வாரமிருமுறை இதழும் வாட்ஸ் அப் மூலம் அவரிடம் பேட்டி கண்டு வெளியிட்டது. நெருக்கடிகள் அதிகரிக்கவே சில மாதங்களுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

கடந்த 2015 டிசம்பர் 25ஆம் ஆண்டு யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்

கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஏழு ஆண்டு கால வழக்கு

ஏழு ஆண்டு கால வழக்கு

கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

அப்பீல் மனு தாக்கல்

அப்பீல் மனு தாக்கல்

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால் அதற்கும், 164 வாக்குமூலங்கள் வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது. கீழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது.

 சுவாதியை விசாரிக்க வேண்டும்

சுவாதியை விசாரிக்க வேண்டும்

மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப்போல தவறுக்கு எதிராக சமநிலையைப் பேண இயலாது. நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. இது கட்டாயம் தேவையானது, தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் தோன்றுகிறது. நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுவாதி ஆஜர்

சுவாதி ஆஜர்

சுவாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தனர். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியின் உத்தரவை அடுத்து சுவாதி இன்று மதுரைக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி உண்மையை பேசுவாரா பார்க்கலாம்.

சுவாதி ஆஜர்

சுவாதி ஆஜர்

சுவாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தனர். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியின் உத்தரவை அடுத்து சுவாதி இன்று மதுரைக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

சுவாதி வாக்கு மூலம்

சுவாதி வாக்கு மூலம்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாக்குமூலம் அளித்த சுவாதி, சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை என்று கூறினார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என சுவாதி தெரிவித்தார். உண்மையை மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் என்று நீதிபதி கேட்கவே கதறி அழுது கண்ணீர் விட்டவாரே வாக்குமூலம் அளித்தார்.

English summary
Gokulraj honour killing case: Gokulraj was brutally murdered for being accustomed to changing caste. The police today produced Swathi, who became a star witness, in the High Court bench, Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X