என்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்!
மதுரை: மதுரை விமான நிலையத்தில், பயணப் பையின் கைப்பிடியில் (Stroller Suitcase Handle) மறைந்து கடத்தி வரப்பட்ட 1100 கிராம் தங்கத்துகள் ரூ 42 லட்சத்து 08 ஆயிரம் கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் அவரை தனியாக அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 1100 கிராம் ரூ 42 லட்சத்து 08 ஆயிரம் மதிப்புள்ள கம்பி போன்ற அமைப்புடை தங்கத்தை பயணப் பையின் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் வெளி நாட்டில் இருந்து வரும் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜலாலுதீன் மகன் சாகுல் ஹமீது என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டுவந்த பயணப் பையில் கைப்பிடியில் மறைத்து தங்க கடத்தி வந்தது தெரியவந்தது.
கோவையில் கொடூர விபத்து.. அனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாணவிகள் பரிதாப பலி
சாகுல் ஹமீது இடம் இருந்த கம்பி வடிவ தங்கத்தின் மதிப்பு ரூ. 42 லட்சத்து 08 ஆயிரம் ஆகும். இதனையடுத்து அவரிடமிருந்து தங்க கம்பியை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். மேலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் சாகுல் ஹமீதை பெருங்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெருங்குடி காவல்துறையினர் சாகுல் ஹமீது - யை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.