மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் செல்போனும் கையுமா இருக்காங்களே - பாட்டியின் வேற லெவல் அர்ச்சனை

Google Oneindia Tamil News

மதுரை: தாத்தா பாட்டிகள் ஒரு வீட்டில் இருந்தாலே போதும் ஆலோசனை சொல்ல நல்ல மந்திரிகளாய், பிள்ளைகளை பார்த்துக்கொள்ள ஆதரவாய், கை வைத்தியம் சொல்ல நல்ல மருத்துவர்களாக இருப்பார்கள். இப்போது யாரும் வீட்டில் உள்ள பெரியவர்களை கவனிக்க கூட நேரம் இருப்பதில்லை. முதலில் டிவி, அப்புறம் கம்யூட்டர், இப்போ செல்போன் என மக்களை இயந்திரங்கள் ஆட்டிப்படைக்கின்றன. செல்போன் வந்த பிறகு பெண்களும், குழந்தைகளும் எப்படி எல்லாம் மாறி விட்டார்கள் என்று சொல்லி அங்கலாய்க்கிறார் ஒரு பாட்டி. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இல்லத்தரசிகளுக்கு செல்போனில் பொழுது போய்விடுகிறது. சமூக வலைத்தளங்களில் பிசியாகி விடுவதால் யாருடனும் பேசுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. அதை மையப்படுத்திதான் இந்த பாட்டி பேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பதை அப்படியே தந்திருக்கிறோம்.

Grandmas viral video - Cell phone and Computor how to affect family lift

அந்த காலத்தில போனு, டிவி கம்யூட்டர் எதுவும் இல்லை நாங்க சந்தோஷமா பொறனி பேசிட்டு இருந்தோம். முதல்ல டிவி வந்துச்சு இப்ப எல்லோரும் கம்யூட்டர், போனு லேப்டாப் ஐ வச்சிக்கிட்டு எல்லோரும் பார்க்குறாங்க. யாரு கொள்ளையடிச்சாலும் தெரியாது

எல்லா பொம்பளைங்களும் செல்போனும் கையுமா இருக்காங்க. சோறு ஆக்கியாச்சான்னு கேட்டா, செஞ்சாச்சு போய் போட்டு சாப்பிடுன்னு சொல்றாங்க.

அதே பிள்ளைங்க எல்லாம் டேய் அவனை சுடுறா, குண்டை போடுறா தூப்பாக்கியை எடுத்து சுடுறான்னு சொல்றாங்க. கத்தியை எடுத்து குத்தணும்னு சொல்றாங்க. விடிய விடிய வெளையாடுறாங்க. யாரும் படிக்கிறதுல அந்த ஆர்வத்தை காட்றது இல்லை.

சீனாவுக்கு தக்க பதிலடி தான்.. இது பழிவாங்கும் பதிவிறக்கம்.. கப்ரி,சிங்காரிக்கு நல்ல வாய்ப்பும் கூட!

அந்த காலத்தில வீட்டு முன்னாடி காக்கா உட்காந்து கத்துனாலே விருந்தாளி வரப்போறாங்கன்னு சந்தோசப்படுவோம். விருந்தாளி வந்தா நல்லா தண்ணிய கொடுத்து உபசரிப்போம். சாப்பாடு போடுவோம். அவங்க கிளம்புனா இன்னும் நாலு நாளைக்கு இருந்துட்டு போங்கன்னு சொல்லுவோம். நல்லா ஆதரிப்போம்.

இப்ப விருந்தாளி வந்தா தண்ணீ, சாப்பாடு கொடுத்தா அது கூட முக்கியமில்லை விருந்தாளிங்க வரும்போதே செல்போனுக்கு சார்ஜ் போட சொல்றாங்க. முந்தி எல்லாம் ஏழு மணிக்கு சமைப்போம். சீக்கிரம் சாப்பிடுவோம். இப்போ செல்போன்ல பார்த்துட்டே 10 மணி வரைக்கும் சாப்பிட கொடுக்கிறதில்லை.

வீட்டுகாரருக்கு நாங்க பயப்படுவோம். ஆனால் இப்ப எல்லாம் புருஷனை பொண்டாட்டிங்க அடிக்கிறாங்க. புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்க அனுப்பி விட்டதும் செல்போனைத்தான் தட்றாங்க. சுவிக்கி, ஜமோட்டாவில் ஆர்டர் பண்ணி சாப்பிட சொல்றாங்க.
காலம் மாறிப்போச்சப்பு என்று அங்கலாய்க்கிறார் பாட்டி.

பாட்டி உண்மையைத்தானே சொல்றாங்க

சீனாவுக்கு தக்க பதிலடி தான்.. இது பழிவாங்கும் பதிவிறக்கம்.. கப்ரி,சிங்காரிக்கு நல்ல வாய்ப்பும் கூட!

English summary
Cell phone and Computor how to affect family life here grandma's speech goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X