இன்று திருமணம் நடக்க இருந்த மகனுக்கு.. நேற்றே காரியம் செய்த தந்தை.. மிரண்டு போன மதுரை!
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திருமணம் ஆக விருந்த நிலையில் மணமகனை தந்தையே கோடாறியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (20) சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்
மொத்தமாக 4 பேர்.. அதிமுக அடிமடியிலேயே கைவைத்த திமுக.. காலியாகும்
இந்த நிலையில் தனது தந்தை இளங்கோவனுக்கும் வாலிபர் பிரதீப்புக்கும் அடிக்கடி சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

ஜாமீனில் வெளியே வந்தார்
பிரதீப் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார 17 வயது சிறுமிமை அழைத்துச் சென்று திருமணம் செய்ததால் சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ வழக்கில் வாலிபர் பிரதீப் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வாலிபர் பிரதீப் வந்ததாக கூறப்படுகிறது

வீட்டில் பிணம்
இந்த நிலையில் பிரதீப்புக்கும் அதே சிறுமிக்கும் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இன்று (ஞாயிறுகிழமை) மணமகன் வீட்டில் திருமணம் நடத்த பேசி முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. குடிபோதையில் தந்தை மகனுக்கும் தகராறு முற்றியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இதில் மணமகன் பிரதீப் வீட்டில் பிணமாக கிடந்தார்.

தந்தை கொலை செய்தார்
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில். மணமகன் பிரதீப் குடிபோதையில் தந்தை இளங்கோவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் அருகிலிருந்த கோடாரியால் தந்தை தனது மகன் என்றும் பாராமல் பிரதீப்பை கோடாறியால் சராமாரியாக வெட்டிபடுகொலை செய்தார். பின்னர் இளங்கோவன் நேராக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

போலீசில் சரண்
சென்ற

காரியம் செய்த தந்தை
அடிக்கடி குடிபோதையில் தந்தையிடன் தகராறில் ஈடுபட்டதால் இன்று மகனுக்கு திருமணம் ஆக இருந்த நிலையில் தந்தையே மகனை நேற்று கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,