மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது அத்திவரதரை தரிசிக்க வரக் கூடாதா?.. அப்ப நீங்க எதுக்கு?.. எச் ராஜா கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சிபுரம்: விமர்சையாக நடைபெறும் அத்திவரதர் விழா... பிரபல நடிகர்களும் வருகை புரிந்து சாமி தரிசனம்...

    மதுரை: அத்திவரதரை தரிசனம் செய்ய கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கூறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா இன்று மதுரைக்கு வந்தார். அங்கு மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏழை மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக தான் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. 20 மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது பொய்யான தகவலாகும்.

    H.Raja condemns TN government for saying to not come to Athivaradhar darshan

    தேசிய கல்விக் கொள்கையை மாற்றம் செய்ய அரசு தயாராக உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக அத்திவரதரை தரிசிக்க உடல்நலக் குறைவு உள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

    இது கண்டிக்கத்தக்கது. அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறத்தை அழிக்கும் துறையாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இறப்புக்கு பின் திராவிட இயக்கங்கள் பொய்யான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகிறது.

    English summary
    BJP National Secretary H.Raja condemns TN government for saying to not come to Athivaradhar darshan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X