மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக குடும்பம் களவாணி குடும்பம்.. தினகரன் தீயசக்தி.. எச். ராஜா பாய்ச்சல்

Google Oneindia Tamil News

மதுரை: திமுக குடும்பம் என்பது களவாணி குடும்பம். அதேபோல தினகரன் அணி ஒரு தீயசக்தி என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியாதவது:

திமுக குடும்பமே களவாணி குடும்பம். டிடிவி தினகரன் அணி வெளிப்படையாக திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

H Raja slams DMK and Dinakaran

எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா வரை திமுக கட்சி தீயசக்தி என்பதை மக்கள் மனதில் தெளிவாக பதிவு செய்துள்ளனர். ஆகவே திமுகவோடு கைகோர்ப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது எம்ஜிஆர்,க்கும் ஜெயலலிதா க்கும் நினைவுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகசெயல்.

முதன்முதலாக சென்னை மாநகராட்சிக்கு திமுக தரப்பில் பொறுப்பேற்றபோது துப்புரவு தொழிலாளர்களின் கூலியில் முறைகேடு செய்தது திமுக தான். திமுக குடும்பம் ஒரு களவாணி குடும்பம். அவர் வழியில் வந்த ஸ்டாலின் பிரதமரையே குறை கூறி வருகிறார்.

சாலையோர டீக்கடையில்.. அமைச்சர்களுடன் டீ சாப்பிட்ட முதல்வர் சாலையோர டீக்கடையில்.. அமைச்சர்களுடன் டீ சாப்பிட்ட முதல்வர்

திமுக கட்சி என்பது விஞ்ஞான அளவிற்கு ஊழல் செய்யும் கட்சி அப்படிப்பட்ட கட்சியோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைகோர்ப்பது என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகச் செயல்.

தற்போது நடைபெற இருக்கிற 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக விற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் முடிவு தெரியும். தினகரன் அணி என்பது ஒரு தீய சக்தி. நேற்றைய தினம் ப.சிதம்பரம் பேசிய பேச்சு மிகவும் வன்மையான பேச்சு.

தமிழகத்தில் திமுக வெற்றி பெறாமல் போனால் கூட இந்த ஆட்சியை கலைப்பேன் என்று அவர் கூறுவது வரைமுறை இல்லாத செயல். தமிழகத்தில் ஒரு நிலையற்ற நிலைமையை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் திமுக மற்றும் தினகரன் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

English summary
BJP leader H Raja has come down heavily on DMK and TTV Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X