மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையைபோல் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. மதுரை மக்கள் அச்சம்.. ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு!

Google Oneindia Tamil News

மதுரை: சென்னையை போல் மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக ஆனது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 4 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாநகரில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆகும்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

5 மாவட்டங்களில்

5 மாவட்டங்களில்

இதுவரை 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் சென்னையை போல் மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

மதுரையை தவிர்த்து மற்ற இடங்களில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் 12ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிராமம்

கிராமம்

அப்போது அவர் கூறுகையில் மதுரையில் கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மதுரையில் முதலில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டதாலும் இங்கு கொரோனா எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரையிலும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Bubonic plague சீனாவில் அடுத்த தொற்றுநோய்? மக்களுக்கு எச்சரிக்கை

    English summary
    Health Department Secretary J Radhakrishnan says that we have to take steps to set up corona medical camps at all villages in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X