மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'கும்பகோணம் ஐயர் சிக்கன்' .. குயுக்தியான விளம்பரத்தால் மதுரையில் பரபரப்பு.. இந்து முன்னணி போராட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் மதுரையில் அசைவ உணவகம்..வீடியோ

    மதுரை: மதுரையில் உள்ள பிரபல அசைவ உணவகம் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் வெளியிட்ட விளம்பரத்தை கண்டித்து இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில் பிரபல அசைவ உணவகம் ஹோட்டல் மிளகு என்ற பெயரில் இயங்கி வரக்கூடிய இந்த உணவகம் ஆனது தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு புதியதாக மக்களை கவரும் வண்ணம் ஒரு விளம்பரம் செய்திருந்தார்கள். அந்த விளம்பரத்தில் மதுரையில் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் இந்த விளம்பரம் வெளியானது.

    Hindu front organizations argue over Kumbakonam Iyer Chicken advert in Madurai

    இதனை அறிந்த பிராமணர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட ஹோட்டலை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனை தொடர்ந்து இன்று காலை இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி தலையில் 10க்கும் மேற்பட்டோர் ஹோட்டலில் உள்ளே நுழைந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து நிர்வாகத்தை அணுகி விளக்கம் கேட்டபோது தெரியாமல் நடந்து விட்டது என்றும் அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர் இந்த சம்பவத்தால் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் பழம்பெருமை வாய்ந்த மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த கடையில் இந்த மாதிரியான ஒரு விளம்பரம் வந்ததால் இப்பகுதி மக்களும் கூடிவிட்டனர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தினரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனிடையே கும்பகோணம் ஐயர் சிக்கன் விளம்பரத்தை வெளியிட்ட உணவகம் பகிரிங்க மனிப்பு கேட்டு வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Hindu front organizations argue in hotel who releasd 'Kumbakonam Iyer Chicken' advert in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X