மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை சம்பவம்.. விசாரணையில் திடுக் தகவல்கள்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாதி மறுப்பு திருமணமே காரணம் என சொல்லப்படுகிறது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் தெற்கு மாரட் வீதியில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்தது. பின்னர் சுதாரித்து கொண்ட சதீஷ்குமார் பைக்கை விட்டு ஓடத் தொடங்கினார்.

அப்படியும் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.

துரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்புதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு

மதுரையில் பரபரப்பு

மதுரையில் பரபரப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தேர்தல் நேரத்தில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு தகவல்கள்

பரபரப்பு தகவல்கள்

இது தொடர்பாக போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராயப்பட்டு வந்தது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதல்

காதல்

அதில் மதுரை பழங்காநத்தம் அருகே முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்து செல்லும் போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

மீண்டும் திரும்பிய அனிதா

மீண்டும் திரும்பிய அனிதா

இதையடுத்து இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனிதாவுக்கு காவல் துறையில் பணி கிடைத்துவிட்டது. இதனால் அவர் திருச்சியில் காவல் பயிற்சி பிரிவில் சேர்ந்தார். இதனையடுத்து அனிதாவின் உடல் நிலை சரியில்லாததால் அவர் கணவன் வீட்டுக்கே மீண்டும் திரும்பினார்.

2-ஆவது திருமண்

2-ஆவது திருமண்

இந்த நிலையில் அனிதாவின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்ததன் பேரில் அவர் அங்கு சென்றுவிட்டார். மேலும் அனிதாவும் சதீஷ்குமாரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிடுவதாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனிதா புகாரளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு அவர் சம்மதித்ததன் பேரில் 2-ஆவது திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புகார்

புகார்

இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா, 2-ஆவது கணவர் தன்னை துன்புறுத்துவதால் வீட்டிலிருந்து தன்னை அனைத்து செல்லுமாறு சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவரும் தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர்.

சதீஷ்குமார்

சதீஷ்குமார்

இதையடுத்து போலீஸார் அனிதாவை மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீஸார் கூறியதன் பேரில் சதீஷ்குமார் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

கொலை

கொலை

அப்போது மதிய உணவுக்காக வெளியே சென்ற போதுதான் சதீஷ் குமார் கொலை செய்யப்பட்டுவிட்டார். அனிதாவின் சகோதரன் மற்றும் உறவினர்கள்தான் சதீஷ்குமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மேலும் 2-ஆவது திருமணமும் அவரது சம்மதத்தின் பேரிலேயே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

பரபரப்பு

பரபரப்பு

இந்தக் கொலை வழக்கில், கோவில்பட்டியில் பதுங்கியிருந்த கூலிப்படையைச் சேர்ந்த அரவிந்த் குமார், விஜய், ஆனந்த், தனபாண்டி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Madurai youth hacked to death because of honour killing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X