மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஜனை செய்வதாகக் கூறி யார் கேட்டாலும் அனுமதிப்பீங்களா? மதுரை ஹைகோர்ட் அதிரடி!

தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் மூலம் கூடாரம் அமைக்கப்பட்டதை தொல்லியல் துறை ஏன் தடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    யார் பஜனை செய்ய கேட்டாலும் அனுமதிப்பீங்களா?.. நீதிமன்றம் சரமாரி கேள்வி- வீடியோ

    மதுரை: தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் மூலம் கூடாரம் அமைக்கப்பட்டதை தொல்லியல் துறை ஏன் தடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சார்பில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மண்டபங்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    விளக்கம் அளித்தது

    விளக்கம் அளித்தது

    நேற்றே இந்த வழக்கில் பதில் அளித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பு, தங்களுக்கு விழா நடத்த தொல்லியல் துறைதான் அனுமதி வழங்கியது என்று கூறியது. மத்திய தொல்லியல்துறையும் கோவில் நிர்வாகமும் அனுமதி வழங்கிய காரணத்தால் எங்கள் மீது தவறு இல்லை என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பு விளக்கம் அளித்தது.

    என்ன பதில்

    என்ன பதில்

    ஆனால் இந்த வழக்கில் ஆஜாரான மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரப்பு விளக்கத்தை மறுத்தனர். அதில், நாங்கள் பந்தல் போட, தியான நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கவில்லை. பஜனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கினோம் என்று கூறியது.

    சரமாரி கேள்வி

    சரமாரி கேள்வி

    இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் மத்திய தொல்லியல்துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை கேட்டனர். அதன்படி பெரிய கோவிலில் கூடாரம் அமைக்கப்பட்டதை தொல்லியல் துறை ஏன் தடுக்கவில்லை? கோவில் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. உங்கள் அனுமதி இல்லாமல் எப்படி கூடாரம் அமைக்கப்பட்டது.

    பஜனை

    பஜனை

    பஜனை செய்வதாகக் கூறி யார் அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா?.இந்த விழா ஏற்பாடுகளை கண்காணித்தது யார். எதன் அடிப்படையில் அனுமதி அளித்தீர்கள், என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

    English summary
    How Sri Sri Ravishankar gets permission to do Bhajan in Big Temple? asks Madurai High Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X