மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜன் செல்லப்பா மீண்டும் சொல்றத பார்த்தா.. அதிமுகவுல எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்காங்க போலயே

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajan chellappa: தன் முடிவில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை- ராஜன் செல்லப்பா- வீடியோ

    மதுரை: அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என போர்க்கொடி உயர்த்திய ராஜன் செல்லப்பா, தன் முடிவில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை என்றும் தன் கருத்தை ஆதரித்து பலரும் தொலைப்பேசியில் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

    லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூம் எடுத்துள்ளது. அதிமுகவில் ஒவ்வொருவரும் தலைமை மீது உள்ள அதிருப்தியை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை கேட்டு போர்க்கொடி உயர்த்தினார் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா.

     i am not withdraw a decision of aiadmk lead by one head, says rajan chellappa

    அதிமுகவில் இரட்டை தலைமை இருக்கக்கூடாது என்றும் ஒற்றை தலைமை தேவை என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்தினார்.

    இந்நிலையில் ராஜன் செல்லப்பா நேற்று இது பற்றி மீண்டும் பேசுகையில், "ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் சந்தித்தும் தொடர்ப்பு கொண்டும் பேசினேன். அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்த பின்னரே நான் கட்சியில் இரட்டை தலைமை இருக்கக்கூடாது ஒற்றை தலமை தேவை என்று சொன்னேன்.

    இதன் பின்னர் நிறையே எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்.அவர்கள் யார் யார்எ ன்ற பட்டியலே உள்ளது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை. என் கருத்து நெகட்டிவான கருத்து என்று யாரும் கூறவில்லை. எனக்கு ஆதரவு என பகிரங்கமாக யாரும் சொல்லவில்லை அவ்வளவு தான். குன்னம் ராமசந்திரன் போல் பலரும் உரிய நேரத்தில் வெளிப்படுத்துவார்கள் பொறுத்திருந்து பாருங்கள், விரைவில் ஒற்றைத் தலைமைக்கான முடிவு நிச்சயம் ஏற்படும். கட்சியில் எதிர்காலம் கருதி வெளியிட்ட முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்" இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.

    English summary
    rajan chellappa says that i am not withdraw a decision of aiadmk lead by one head,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X