மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இப்போதுதான் முதல் முறையாக சந்தித்தேன்.. திருமா

Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இப்போதுதான் முதல் முறையாக சந்தித்தேன்.. திருமாவளவன்

    மதுரை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பினபு இப்போதான் முதல் முறையாக அவரை நேரில் சந்தித்தேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது:

    உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்வை நீக்கி மறைமுக தேர்வுக்கு அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது குதிரை பேரத்தில் வழிவகுக்கும். எனவே தமிழக அரசு அவசர சட்டத்தை ரத்து செய்து நேரடித் தேர்தல் நடக்க ஆவன செய்ய வேண்டும்.

    i met the cm for the first time after he took over, says thirumavalavan

    இலங்கை இனப்படுகொலை குற்றவாளி கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    மேலவளவு படுகொலையில் தொடர்புடைய 13 பேரை முன்கூட்டியே விடுதலை செய்திருப்பது ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிரானது. இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே 13 பேர் விடுதலை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பட்டியலில் அருந்ததியினர் ஆதி தமிழர்கள் இடம்பெறவில்லை. மாவட்ட நிர்வாகம் இதனை பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த விவகாரத்தை காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு இப்போதுதான் முதல் முறையாக சந்தித்தேன்.

    நான் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் முதல்வரை சந்திப்பேன். இதில் தவறு இல்லை.

    தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என மத்திய அரசு சான்றிதழ் வழங்கி இருப்பது அதிர்ச்சியை தருகிறது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முழுமையான விசாரணை கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை இந்த பாலின் விநியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

    நான் இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் கருதி திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி களை குறி வைத்து அவதூறு பரப்பி வருகின்றனர் என்றார் அவர்.

    English summary
    VCK leader Thol Thirumavalavan has said that he met the CM recently for the first time after he took over the power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X