மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடியாத்தீ.. இடியாப்பத்துக்கு குருமா தரலையாம்.. அதுக்காக இப்படியா.. மதுரையை புரட்டி எடுத்த சம்பவம்!

இடியாப்பத்துக்கு குருமா கேட்டதற்காக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

மதுரை: இடியாப்பத்துக்கு குருமா தரவில்லை என்பதற்காக ஒருவரை போட்டு புரட்டி எடுத்துள்ளனர்.. இந்த அக்கரமம் பரோட்டாவுக்கு ஃபேமஸ் ஆன மதுரை மாநகரிலே நடந்துள்ளது.

மதுரையில் பிடி ராஜன் ரோட்டில் டிபன் கடை உள்ளது.. சப்பாத்தி கார்னர் என்று அந்த கடைக்கு பெயர்.. இந்த கடைக்கு அருகில் பர்மா இடியாப்ப கடையும் இயங்கி வருகிறது.. அங்கு சிவா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

Idiyappa shopkeeper attacked by Chappati shopkeepers in Madurai

இந்நிலையில் அந்த கடைக்கு கஸ்டமர் ஒருவர் சாப்பிட சென்றார்.. இடியாப்பம் வாங்கி கொண்டு, அதற்கு தொட்டுக் கொள்ள குருமா கேட்டிருக்கிறார்.. அதற்கு கடைக்காரர், வழக்கமாக, இடியாப்பத்துக்கு தேங்காய் பால், சர்க்கரை தான் வழங்கப்படும் என்று சொல்லி உள்ளார்.. இருந்தாலும் கஸ்டமர் கேட்கிறார் என்பதற்காக பக்கத்து கடையான சப்பாத்தி கார்னர் கடைக்கு சென்று, இடியாப்பத்துக்கு குருமா வேண்டும் என்று கேட்டார்.

அந்த கடையில் வேலை செய்யும் ராஜ்குமாரோ, குருமாவெல்லாம் சும்மா தர முடியாது என்று சொல்லி உள்ளதாக தெரிகிறது.. இதுதான் தகராறுக்கு காரணம். ரெண்டு பேரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டனர்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிவா, இன்னொரு ஊழியர் சரவணனுடன் சேர்ந்து ராஜகுமாரை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு இன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு

இதனால் பலத்த காயமடைந்த ராஜ்குமார் தல்லாகுளம் போலீசில் புகார் தரவும், அதன் அடிப்படையில் சிவா, சரவணன் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. பிறகு ஜாமீனில் உடனடியாகவும் விடுவத்தனர்.. குருமாவுக்காக நடந்த இந்த அடிதடி, அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.

English summary
Idiyappa shopkeeper attacked by Chappati shopkeepers in Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X