• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எதிர்க்கட்சிகளுக்கு பலம் சேர்க்கவிடாமல் தடுப்பதுதான் ராஜதந்திரம்.. பாஜக எம்பி இல கணேசன்

|
  பாஜக எம்பி இல கணேசன் பேட்டி-வீடியோ

  மதுரை: அரசியலில் நமக்கு எந்த அளவிற்கு பலம் முக்கியமோ அதேபோல் எதிர்க்கட்சிகளுக்கு பலம் சேர்க்க விடாமல் தடுப்பது தான் ராஜதந்திரம் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.

  மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மசூத் அசார் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது வரலாற்றில் ரகசியமாக இருந்த ஒன்றை கண்டுபிடித்து பேசியதுபோல் அவர் பேசியுள்ளார்.

  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்திய விமானம் கண்டகாரில் பயணிகளுடன் கடத்தப்பட்டது. அப்போது விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள் மசூத்அசாரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் வாஜ்பாய் தலைமையிலான அரசு அவரை விடுதலை செய்ய தயங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பயணிகளின் உறவினர்களை பிரதமர் இல்லம் முன்பு வைத்து பல்வேறு ஆர்ப்பாட்டம் செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவரை விடுதலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய அயோக்கியன் "பார்" நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கம்

  பயங்கரவாதிகள்

  பயங்கரவாதிகள்

  மசூத்அசாரை விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். இது குறித்த வரலாறு தெரியாமல் ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார். மும்பை முதல் கோயம்புத்தூர் வரை பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் யார் காலத்தில் நடந்தது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு இதுபோன்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒரு சில சம்பவங்களை தவிர்த்து இதுபோன்ற பெரிய தாக்குதல்கள் நடைபெறவில்லை. அதற்கான முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளன.

  பயங்கரவாதிகள்

  பயங்கரவாதிகள்

  மதுரை அருகே மேலூரில் தான் பயங்கரவாதிகள் வெடி குண்டு சோதனை நடத்தினர். அதன்பின் தான் தமிழகத்தில் ராஜகோபால் உள்பட 120 பேர் பயங்கரவாதத்திற்கு பலியாகினர். நாட்டில் பல பெரிய திட்டங்களை கொண்டு வர ஆளும் கட்சியோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு முதலமைச்சர் மிக கண்ணியத்தோடு பதில் அளித்துள்ளார், நாட்டில்தவறான செய்திகளைச் சொல்லி மொழி பிரச்சினைகளை மாநில கட்சிகள் தான் எழுப்புவார்கள். தமிழகத்தில் புதிதாக விடப்பட்டுள்ள ரயிலுக்கு தேஜஸ் என்று பெயர் வைக்காமல் தமிழிலே பெயர் வைத்திருக்கலாம் என பலர் பேசி வருகின்றனர்.

  தனித்துறை

  தனித்துறை

  ஆனால் தமிழகத்தில் பலரின் குழந்தைகளுக்கு தேஜஸ் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பியது, தமிழில் பெயர் வைத்த கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. திராவிடர் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. இது குறித்த கேள்வி எல்லாம் மற்றவர்கள் எழுதலாம் ஆனால் நான் மதிக்கும் தலைவர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு போன்ற கேள்விகளை எழுப்பி மக்களின் உணர்ச்சிகளை தூண்டுவது பொருத்தமானது அல்ல. ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீன் வளத்தைப் பாதுகாக்க தனியாக துறை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

  அமலானது

  அமலானது

  ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் பியூஸ்கோயல் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . வாக்குறுதி என்பது வேறு தேர்தல் அறிக்கை என்பது வேறு கொள்கையை நாங்கள் செய்வோம் என்று உறுதி தருவது வேறு ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துவிட்டால் அது அமலானதுக்கு சமம். ஆனால் இது குறித்து அறியாமல் தற்போது ராகுல் காந்தி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய அளவில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல அமைப்பினரை சந்தித்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கேட்ட உள்ளனர். இந்த குழுவில் எனக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

  ஏப்ரல் மாதம்

  ஏப்ரல் மாதம்

  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நீதிமன்றத்திற்கு சென்று தற்போது நீதிமன்றம் மூலமாக ஆளுநருக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. கோடை விடுமுறையின் போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் அப்போது தேர்தல் நடத்தப்படலாம் என்பது கடந்த காலத்தை ஒப்பிட்டு தான், தமிழக முதல்வர் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

  அதிமுக கூட்டணி

  அதிமுக கூட்டணி

  இதில் அரசியல் வேறு எந்த காரணங்களும் கிடையாது. தமிழகம் மற்றும் கேரளாவில் முதலில் தேர்தல் வரும் என்பது பொதுவான நடைமுறை. தேமுதிகவை அதிமுக கூட்டணியில் வரவேற்பதாக ஏற்கனவே முதலமைச்சர் பேசியுள்ளார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியும் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையண்டும் என்று கூறியுள்ளோம். இது நன்மைக்குதான், இதில் அவரை சேர்க்க வேண்டாம் இவரை சேர்க்க வேண்டாம் என்று கூறினால் தான் தவறு. அரசியலில் கூட்டணி என்று வரும்போது மக்கு எந்த அளவு பலம் சேர்க்க முடியுமோ சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். நமக்கு எந்த அளவிற்கு பலம் முக்கியமோ அதேபோல் எதிர்க்கட்சிகளுக்கு பலம் சேர்க்காமலும், சேரவிடாமல் தடுப்பது அரசியலில் ராஜதந்திரம்.

  நரேந்திர மோடி

  நரேந்திர மோடி

  கர்நாடகா, மகாராஷ்டிரா போன்றவற்றில் இதுபோன்ற முயற்சி செய்யாததால் தோல்வி ஏற்பட்டது. அதனால் இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்போ பாஜக நிலைப்பாடு குறித்து அதிமுகவின் சிறு தொண்டர்கள் கூட குறை சொல்லவில்லை. காரணம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி தினசரி நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

  மரணம்

  மரணம்

  தனது பிரதிநிதியாக பல பேரை அனுப்பியுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை கவர்னர் கூட பார்க்க முடியாத சூழல் அதாவது தொற்று காரணமாக இருந்த நிலையில், ஜெயலலிதா உடன் அதிக நட்பாக இருந்தவர் பிரதமர் மோடி அதனால்தான் அவரின் மரணத்தின் போது அதிக நேரம் அவரும் உடன் இருந்தார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது ஜெயலலிதா கூறியதையடுத்து விமானம் மூலம் உடனடியாக வந்து பார்வையிட்டனர். இதுவரை மத்தியில் இருந்த அரசை விட தற்போது உள்ள அரசு தமிழகத்திற்கு அதிக திட்டங்களை செய்து வருவதாக முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார் என்றார் இல கணேசன்.

   
   
   
  English summary
  BJP MP Ila Ganesan in Madurai says that we have to ban so much strength gained to Opposition by making alliance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X