மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி வந்தால்... கோடி நன்மை… மக்களுக்கு புரிய வேண்டும்... சொல்கிறார் இல. கணேசன்

Google Oneindia Tamil News

மதுரை: தேசம் நன்மைக்காக மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். மோடி வந்தால் கோடி நன்மை என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: "காஷ்மீர் எல்லையில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான செய்திகள் நாட்டையே உலுக்கியது. காஷ்மீர் தாக்குதல் தேர்தலை மையமாக கொண்டு நடைபெற்று உள்ளது. பிரதமர் பதிலடி கொடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்கும் அதேவேளையில், தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


மனதுக்கு ஆறுதல்

மனதுக்கு ஆறுதல்

பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் மனதுக்கு ஆறுதல் தருகிறது. இத்தோடு தாக்குதல்கள் முடிய வேண்டும். ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் மீட்க வேண்டும். ஒரு அங்குலம் இடம் கூட விட்டு கொடுக்க கூடாது. பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் ராகுல்காந்தி விமர்சனம் செய்து வருகிறார்.

ஸ்டாலினுக்கு கேள்வி

ஸ்டாலினுக்கு கேள்வி

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் மட்டுமே நடந்து உள்ளது. பாஜக ஆட்சி காலத்தில் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. எந்தவொரு தீர்ப்பு வந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். திராவிடம் என்பதற்கு அர்த்தம் என்ன, இன்னும் திமுகவில் திராவிடம் உள்ளதா என ஸ்டாலினுக்கு கேள்வி கேட்கிறேன்.

பெரும்பான்மை கிடைக்கும்

பெரும்பான்மை கிடைக்கும்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்ட உடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்குகிறது. பாஜக 3 ல் 2 பங்கு இடங்களை பிடிக்கும். தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தேமுதிகவோடு பேச்சுவார்த்தை

தேமுதிகவோடு பேச்சுவார்த்தை

தாழ்த்தப்பட்ட பிரிவில் சேருங்கள் என கோரிக்கை வந்து கொண்டு உள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது வியப்பாக உள்ளது என அமித்ஷா கூறி உள்ளார். தேமுதிகவோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற தேமுதிகவோடு அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரதமர் வருகிறார்

பிரதமர் வருகிறார்

தேமுதிக போட்டியிடும் இடங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது. தேமுதிக மட்டுமல்லாமல் இன்னும் சில கட்சிகளோடு அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேசம் நன்மைக்காக மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். மோடி வந்தால் கோடி நன்மை என மக்களுக்கு புரிய வேண்டும். மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் வருகிறார்.

வைகோ கோரிக்கை

வைகோ கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு நல திட்டங்களை கொண்டு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து உள்ளார். கோரிக்கையை வைகோ ஏற்ப்பார் என நினைக்கிறேன் " என தெரிவித்தார்


English summary
ila.Ganesan explanation: Indian Air Force attack brings to mind Comfort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X