மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பரங்குன்றம்.. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்: மதுரை கலெக்டர்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை-வீடியோ

    மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூட்டாக பத்திரிக்கையாளர் சந்தித்தனர்.

    Ink will be placed in middle finger of the Madurai Thiruparankundram constituency voters

    அப்போது பேட்டியளித்த ஆட்சியர் நாகராஜன், மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு சரியான முறையில் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பரங்குன்றம் தொகுதியில் பொது தேர்தல் பார்வையாளராக ஓம்பிரகாஷ் சாய், தேர்தல் செலவின பார்வையாளராக சதீஷ்குமாரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 297 வாக்குச் சாவடிகள் உள்ளது.

    சாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்!சாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்!

    88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 1500 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 1400 மின்ணனு வாக்கு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.நாளை முதல் மிண்ணனுவாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளர் பெயர், சின்னம் பொறுத்தும் பணிகள் நடைபெறும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 9 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பகுதியில் கூடுதலாக 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 சதவீதம் பூத் சிலிப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் நாகராஜன் கூறினார்.

    English summary
    Ink will be placed in middle finger of the Madurai Thiruparankundram constituency voters said Madurai district Collector. Thiruparankundram by election held on 19 May.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X