மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு பறிமுதல்.. மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. அதிகாரிகள் விசாரணை!

மதுரை சிம்மக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு, அதிகாரிகள் விசாரணை!- வீடியோ

    மதுரை: மதுரை சிம்மக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க அங்கங்கே ஐடி ரெய்டு நடந்து வருகிறது . கடந்த இரண்டு வாரம் முன்தான் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. அதன்பின் டெல்லி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது.

     IT department raids in an AIADMK office in Madurai

    ம.பி முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் வீட்டிலும் கடும் சோதனை நடைபெற்றது. நேற்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    இந்த நிலையில் மதுரை சிம்மக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிமுகவின் 82வது வார்டு அலுவலகம் ஆகும் இது. தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

    மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், உங்க 'பாட்சா' பலிக்காது, வேலையை காட்டாம விடமாட்டாங்க.. ஸ்டாலின்மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், உங்க 'பாட்சா' பலிக்காது, வேலையை காட்டாம விடமாட்டாங்க.. ஸ்டாலின்

    இந்த சோதனையில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் பெரிய பெட்டி ஒன்றில் வாக்காளர் பெயர் பட்டியல் இருந்துள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச பொருட்களும் இருந்துள்ளது.

    இது தொடர்பாக அதிமுக 82வது வட்ட செயலாளர் தேவதாஸை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பதுக்கி வைத்து இருந்தது ஏன் என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    இதை அனைத்தும் பறக்கும் படையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். இது முதற்கட்ட சோதனை மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் மீண்டும் அங்கு சோதனை நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    English summary
    IT department raids in an AIADMK office in Madurai amidst election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X