மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

Google Oneindia Tamil News

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள், 739 காளைகள் பங்கேற்றது.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலேயே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றது. இந்த நிலையில் அலங்காநல்லூர் போட்டியை காண வெளிநாட்டில் இருந்து கூட மக்கள் வந்திருந்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ரஞ்சித் குமார் சுற்றி சுற்றி காளைகளை அடக்கினார். மிகவும் வலுவான காளைகளை கூட, இவர் அசால்ட்டாக அடக்கினார். மற்ற வீரர்கள் நெருங்குவதற்கு அச்சப்பட்ட காளைகளை கூட, இவர் பயமின்றி அடக்கினார்.

ரஞ்சித் குமார்

ரஞ்சித் குமார்

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் ரஞ்சித் குமார் 16 காளைகளை அடக்கினார். 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி ஒவ்வொரு காளைகளை அடக்கியதற்கும் தனி தனியாக பரிசு வழங்கப்பட்டது.

பரிசுகள்

பரிசுகள்

தங்கம், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இவர் 16 காளைகளை அடக்கியது புதிய ரெக்கார்ட் என்று கூறப்படுகிறது.

அடுத்த இடம்

அடுத்த இடம்

அதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய கார்த்திக் 2வது பரிசை வென்றார். மேலும், 13 காளைகளை அடக்கிய கணேசன் 3வது பரிசும் வென்றுள்ளனர். இன்னும் பல வீரர்கள் 10 காளைகளை இந்த போட்டியில் அடக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jallikattu in Madurai's Alanganallur: Ranjith Kumar gets a car for winning over 16 Bulls which is a new record.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X