மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது சசிகலா அதிமுக பொதுச்செயலாளாரா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அறிவிப்பு வர காரணம் என்ன?

சசிகலாவின் மாடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களமிறங்கிய போது, அந்த மாட்டை பிடிப்பவருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.

Google Oneindia Tamil News

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சசிகலாவின் மாடு வாடி வாசலில் இருந்து வெளியே வந்த போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் காளை என்று அடையாளப்படுத்தி அறிவித்தனர். நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் என்று சீறிப்பாய்ந்த காளையை யாராலும் தொடக்கூட முடியவில்லை. அமைச்சர் மூர்த்தி சார்பில் அந்த மாட்டுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரம், ஜனவரி 15ஆம் தேதி பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. தமிழகம் முழுவதும் நேற்று ஊரடங்கு காரணமாக இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

700காளைகளுடன் , 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . போட்டியை காண்பதற்காக 150பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பார்வையாளர்கள் குறைவாக இருந்தாலும் வழக்கமான ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

எதிர்பாராத ட்விஸ்ட்.. சென்னை உட்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.. துணிச்சலான முடிவு! எதிர்பாராத ட்விஸ்ட்.. சென்னை உட்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.. துணிச்சலான முடிவு!

சசிகலா காளை வெற்றி

சசிகலா காளை வெற்றி

ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் விஐபிக்களின் காளைகளும் களமிறங்கின. விகே சசிகலா, டிடிவி தினகரன் காளைகளும் களமிறங்கியது. அந்தக் காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை. வீரர்களால் சசிகலாவின் காளைய தொடவே முடியவில்லை. திமிறிக்கொண்டு ஓடியது மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சின்னம்மா சசிகலா காளை

சின்னம்மா சசிகலா காளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சசிகலாவின் காளை குறித்து பேசும் விகே சசிகலா என்ற சின்னம்மா மாடு என்று அறிவித்தனர். காளையை யாராலும் நெருங்கவே முடியவில்லை. தங்க நாணயத்தை பரிசாக தட்டிச்சென்றது. அதே போல டிடிவி தினகரன் காளையையும் யாராலும் நெருங்க முடியவில்லை. மாடுகளுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.

 சீறிப்பாய்ந்த சசிகலா காளை

சீறிப்பாய்ந்த சசிகலா காளை

இன்றைய தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. செல்போன், அண்டா, சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டன. ஒரு காளை வெளியே வந்த போது அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவின் காளை என்று இன்றைய தினம் வர்ணணையாளர்கள் அடையாளப்படுத்தினர். வாடி வாசலை விட்டு வெளி வந்த காளை நெருப்பாக சீறிப்பாய்ந்து சென்றது.

தங்க மோதிரம் பரிசு

தங்க மோதிரம் பரிசு

சசிகலா மாடு களமிறங்கிய போது, அந்த மாட்டை பிடிப்பவருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். ஆனால், அந்த மாடு பிடிபடாமல் சென்றதால், மாட்டின் உரிமையாளருக்கு மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சசிகலா என்ற சின்னம்மா என்று அறிவித்த விழாக்குழுவினர் இன்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று அறிவித்து பார்வையாளர்களை திரும்பிப் பார்க்க வைத்தனர்.

எண்ணற்ற பரிசுகள்

எண்ணற்ற பரிசுகள்

இன்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய சிறந்த மாடு பிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்திருந்தார். அதன்படி வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளருக்கு தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டன.

English summary
Alankanallur jallikkattu 2022: (அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2022 )Sasikala's bull when she came out of the vadivasal during the Alankanallur jallikkattu competition identified AIADMK general secretary Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X