மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமிறிய காளைகள்.. சீறிய வீரர்கள்.. தெறிக்கவிட்ட உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் விழா நடைபெறுகிறது. பல ஊர்களில் இன்று சிறப்பு விழாக்கள், கோவில் வழிபாடுகள் நடக்கிறது. எல்லா வருடமும் காணும் பொங்கல் அன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

பல மக்கள்

பல மக்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றதாகும். இதை காண உலகம் முழுக்கவிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். அதேபோல் இந்தியாவின் பிறபகுதியில் இருந்தும் மக்கள் இந்த போட்டியை காண வந்தனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

காளைகள்

காளைகள்

இந்த ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் சீறிப்பாய்ந்தன. இந்த காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நேற்றே நடந்து முடிந்துவிட்டது. கடும் பரிசோதனைக்கு பின்பே இந்த காளைகள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது.

எத்தனை

எத்தனை

இதில் 848 மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க உள்ள காளையர்களுக்கு மருத்துவ பரிசோதனை நேற்று மாலை நடந்தது. இன்று அதிகாலை சிலருக்கு நடந்தது. மொத்தம் 12 வீரர்கள் இந்த போட்டியில் காயம் அடைந்தனர்.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

இந்த போட்டி காரணமாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 ஏஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 30 பேர் கொண்ட இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படை முதல்முறையாக பாதுகப்பு பணி மேற்கொண்டது.

English summary
Jallikattu in Madurai's Alanganallur starts with heavy protection, the temple bulls are entering for worship through the Vadivasal , the bull-entering point.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X