மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதற வைக்கும் சம்பவம்.. பைக்குடன் பெண்ணை தர தரவென இழுத்து சென்று நகை பறித்த 4 பேர் கைது

உசிலம்பட்டியில் பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

மதுரை: செயினை பறிக்க போய், ரோட்டில் பெண்ணை தரதரவென 4 பேர் இழுத்து சென்றுள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்போதெல்லாம் நகை பறிப்பது என்பது அசால்ட்டாக நடந்து வருகிறது. அதிலும் பெண்களின் தாலி செயின் என்றாலே கொள்ளையர்களுக்கு அதன் மேல் தனி "கண்"தான்.

Jewellery Flush with woman in Usilampatti

நிறைய இடங்களில் இந்த தாலியை குறி வைத்துதான் நகை பறிப்பு சம்பவமே நடந்து வருகிறது. இப்படித்தான் உசிலம்பட்டியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பைக்கில் வந்து பெண்ணின் செயினை பறிக்க முயன்றனர்.

Jewellery Flush with woman in Usilampatti

ஆனால் உஷாரான அந்த பெண்ணோ, செயினை இறுக்கமாக கையில் பிடித்து கொண்டார். கையில் செயின் மாட்டிக் கொள்ளவும், பைக்கில் வந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் செயினோடு சேர்த்து அந்த பெண்ணை தரதரவென பைக்கில் இழுத்து சென்றனர்.

சாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்சாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்

கொஞ்ச தூரத்துக்கு தரையிலேயே பெண்ணின் உடல் அப்படியே உராய்ந்து, தோல்கள் உரிந்து.. ரத்தம் கொட்டியது.. கடைசியில் செயினையும் பறித்து கொண்டு பைக்கில் பறந்தனர் அந்த நால்வரும். இதில் கை, முதுகு, தோள்பட்டை என பல்வேறு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

இது பற்றிய புகார் அளித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்துவிட்டனர். ஆனால், தோல் உரிந்து போய், படுகாயம் அடைந்த பெண்ணின் போட்டோக்கள், இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்து வருகிறது.

English summary
Chain snatching with Young Woman in Usilampatti near Madurai and these images are viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X