மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவியல், குவியலாக கவரிங் நகைகளுடன் ரதிமீனா கன்டெய்னர் லாரி.. மடக்கிய பறக்கும்படை.. மதுரை அருகே

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் ஆறு பண்டல்கள் நகைகளுடன், சென்ற லாரி தேர்தல் அதிகாரிகளால், மடக்கிப் பிடிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், பறக்கும் படையினர் தமிழகம் முழுக்க ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, இன்று மதுரை மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே, பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது, ரதிமீனா ஸ்பீடு பார்சல் சர்வீஸ், என்ற பெயர் கொண்ட மினி லாரி அங்கு வந்தது.

Jewellery loaded truck has been seized in Madurai

லாரியில் உள்ள சரக்கு தொடர்பாக டிரைவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர், லாரியின் சரக்கு பகுதியைத் திறந்து பார்த்தனர்.

அப்போது, லாரியின் உள்ளே, ஆறு பண்டல்களில் நகைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உரிய ஆவணங்கள் இல்லாததினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த லாரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தங்க நகையா, அல்லது கவரிங் நகையா என்பது தொடர்பாக சோதனை நடத்துவதற்கு நகை பரிசோதகர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம் மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்

கன்டெய்னரில், ஆறு பண்டல்களில் நகைகள், பிடிபட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் காலகட்டத்தில், மே 13ம் தேதி திருப்பூர் அருகே பணத்துடன் சென்ற 3 கன்டெய்னர் லாரிகளை அதிகாரிகள் மடக்கினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த அந்த வாகனங்களில் ரூ.570 கோடி ரூபாய் இருந்தது. அது யாருக்கு சேர்ந்த பணம் என்பதில் இதுவரை தெளிவே கிடைக்கவில்லை. இந்த நிலையில் இப்போது கன்டெய்னர் நிறைய நகைகள் கிடைத்துள்ளதால் பெரும் ஷாக்கிங் ஏற்பட்டது.

இதனிடையே விசாரணையில், கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரியவந்தது. தஞ்சாவூரிலிருந்து, மதுரை மற்றும் சாத்தூரிலுள்ள கடைகளுக்கு இந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிறகு பரபரப்பு சற்று குறைந்தது.

English summary
Jewellery loaded truck has been seized in Madurai by the election flying squad, jewellery are kept inside the container says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X