மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருவாயை பெருக்க மாற்று வழியை ஆராயாமல் அரசே மதுபானம் விற்பது வேதனை.. நீதிபதி கிருபாகரன் சாட்டையடி

Google Oneindia Tamil News

மதுரை: வருவாயை பெருக்க மாற்றி வழி குறித்து ஆராயாமல் அரசே மதுபானம் விற்பது வேதனையளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியில் பேருந்து நிறுத்தம் மீது பேருந்து மோதிய விபத்தில் முருகன் என்பவர் பலியாகினார். இதையடுத்து இந்த வழக்கில் முருகனின் குடும்பத்துக்கு ரூ. 5.69 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் புதிய உத்தரவை பிறப்பித்தார்.

 பரோட்டா கடையானாலும் சரி, பியூட்டி பார்லரானாலும் சரி.. அராஜகம் செய்றாங்க.. பிரேமலதா பளார்! பரோட்டா கடையானாலும் சரி, பியூட்டி பார்லரானாலும் சரி.. அராஜகம் செய்றாங்க.. பிரேமலதா பளார்!

மதுபானம்

மதுபானம்

அப்போது அவர் கூறுகையில் வருவாயை பெருக்க மாற்று வழி குறித்து ஆராயாமல் அரசே மதுபானம் விற்பது வேதனையளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக வருவாயை ஈட்டும் நோக்கத்தில் அரசு மதுபானம் விற்கிறது.

மதுவிலக்கு கொள்கை

மதுவிலக்கு கொள்கை

மதுவுக்கு அடிமையாகி அதை குடிப்பவர்களில் பலர் உயிரிழக்கின்றனர். இதனால் அவர்களை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் மது விலக்கு கொள்கையை பின்பற்றினார்.

தவறு

தவறு

காந்தியின் கொள்கைகளை பின்பற்றாமல் அவரை தேசப்பிதா என அழைப்பதில் அர்த்தம் இல்லை. முருகனுக்கு இழப்பீட்டை நிர்ணயம் செய்வதில் தவறு நிகழ்ந்துவிட்டது.

உத்தரவு

உத்தரவு

முருகனின் குடும்பத்திற்கு ரூ.15.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கிறேன். முருகனின் கவனக்குறைவுக்காக இழப்பீட்டில் 15 சதவீதம் கழித்து 15 லட்சம் வழங்க உத்தரவு விட்டார் கிருபாகரன்.

English summary
Chennai HC Madurai brach Judge Kirubakaran says that he is saddened about the sale of liquor made by Government without opting alternative way to double the income.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X