மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்!

இன்று அதிகாலை ஆறு மணிக்கு அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Madurai Chithirai Thiruvila 2019: வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்- வீடியோ

    மதுரை: இன்று அதிகாலை ஆறு மணிக்கு அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

    மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா உலக பிரசித்திபெற்ற ஒன்றாகும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். இதற்காக நேற்று காலை மதுரையில் தேரோட்டம் நடைபெற்றது.

    Kallazhagar descended into the river Vaigai after Ethirsevai function in Madurai

    சித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்சித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்

    இதற்காக அங்கு லட்சக்கணக்கில் அங்கு மக்கள் கூடியிருந்தனர். அங்கு வந்த கள்ளழகரை எதிர்சேவை செய்து வணங்கி வரவேற்றனர். மதுரைக்கு வந்த கள்ளழகர் அங்கிருந்து புதூர் சென்றார். அங்கு பெரிய அளவில் எதிர்சேவை நடந்தது. . கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவில் நேற்று மீனாட்சி கந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    தேர்தல் நேற்று நடைபெறும் கூட பெரிய அளவில் இந்த நிகழ்வில் கூட்டம் இருந்தது. இதனால் மதுரையில் தேர்தல் நேற்று இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு முழுக்க எதிர்சேவை நடந்தது. பக்தர்கள் தூங்காமல், கள்ளழகரை சேவித்துக் கொண்டு இருந்தனர்.

    அதையடுத்து இன்று காலை தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை இன்று அதிகாலை ஆறு மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்துடன் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி , வஸ்திரத்தை சூடி வைகையற்றில் இறங்கினார்.

    இந்த நிகழ்விற்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வால் மதுரை திருவிழாக்கோலம் பூண்டது. அதேபோல் தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்தது.

    English summary
    Kallazhagar descended into the river Vaigai after Ethirsevai' function in Madurai today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X