மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வைரல் வீடியோ.. பக்தர்கள் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட கள்ளழகர்!-வீடியோ

    மதுரை: மதுரையில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு கள்ளழகர் வழிவிட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. அதிகாலை 6 மணிக்கு பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரையில் புறப்பட்ட கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கினார்.

    அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள் அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்

    வலம் வரும் வீடியோ

    வலம் வரும் வீடியோ

    இதை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோர் குவிந்தனர். 9 லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டதால் விழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏராளமானவை வலம் வருகின்றன.

    பின்னோக்கி

    பின்னோக்கி

    அதில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விட முன்னோக்கி சென்ற கள்ளழகர் பின்னால் சென்று வழிவிடும் காட்சி அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ஆம்புலன்ஸுக்கு

    ஆம்புலன்ஸுக்கு

    அந்த வீடியோவில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே கள்ளழகர் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. உடனடியாக கள்ளழகர் மீண்டும் பின்னோக்கி கொண்டு வரப்பட்டு ஆம்புலன்ஸுக்கு வழி விடப்பட்டது.

    தத்துவம்

    தத்துவம்

    ஆம்புலன்ஸ் வந்தால் ஆளானப்பட்ட கடவுளே வழிவிடுகிறார். நாம் எம்மாத்திரம்? எனவே நாமும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்துவருகின்றனர்.

    English summary
    Kallazhagar makes way for Ambulance while he was going to getdown in Vaigai River.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X