மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது "தக்காளியா".. டேய் "தக்கலை" இல்லடா வரும்.. இணையத்தில் திடீர் பரபரப்பாகும் அரசு பஸ் டிக்கெட்!

எழுத்து பிழையுடன் அரசு பஸ் டிக்கெட் வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

மதுரை: "தக்கலையா"... "தக்காளியா".. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு என்ற ரேஞ்சுக்கு அரசு பஸ் டிக்கெட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒன்று ஏற்பட்டுள்ளது..

மதுரை மாவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை போடி கிளையிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்திற்கு தினமும் காலையில் ஒரு பஸ் சென்று வருகிறது.. இதில் மில்டன் என்பவர்

 kanniyakumari gov bus tickets spelling mistake

மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலைக்கு சென்றுள்ளார்.. பஸ்ஸில் ஏறியதும், இவருக்கு மின்னணு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டை பார்த்த மில்டனுக்கு தூக்கி வாரிப்போட்டது... அதில்,தக்கலை என்கிற ஊரின் பெயருக்கு 'தக்காளி' என்று அச்சிடப்பட்டிருந்தது. இதை மில்டன் போட்டோ எடுத்து, சோஷியில் மீடியாவிலும் போட்டுவிட, அதுதான் வைரலாகி வருகிறது.

அதாவது தக்கலை என்கிற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் THUCKALAY என்று எழுத முடியும்... ஆனால் இதை துக்ளே என்றுதான் படிக்கும் நிலை வரும்.. அதனால் ஆங்கிலத்தில் உள்ள அந்த THAKALAI (தக்கலை)யை மொழிபெயர்த்தால் எல்லோருக்கும் புரியும் என்று கடந்த 2010ல்ம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த THAKALAI என்ற வார்த்தையில்தான் A என்ற ஒரு எழுத்து மிஸ் ஆகி, அது THAKALI (தக்காளி) ஆகிவிட்டது.. இதுதான் இந்த தவறுக்கு காரணம்!! இன்னொரு விஷயம் தெரியுமா? தக்கலை என்று ஒரே அப்போது இல்லை.. பத்மநாபபுரம் என்னும் ஊருக்கு தெற்கே உள்ள ஊர் என்பதால் இந்த ஊர் "தெற்கு எல்லை" என அழைக்கப்பட்டு.. பிறகுதான் தக்கலை ஆனது.. அதுகூட இப்போது தக்காளி ஆகிவிட்டதே!!

அதற்குள் இந்த டிக்கெட்டில் வடிவேலுவை கொண்ட வந்து வைத்து மீம்ஸ்கள் போட்டுவிட்டனர் நம் நெட்டிசன்கள்.. "என்னது தக்காளியா? டேய் அது தக்கலை இல்லடா வரும்" என்று மீம்ஸ்கள் பறக்கின்றன.

English summary
stop name mistakenly printed in kanniyakumari gov bus ticket and this ticket goes viral on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X