மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசாக காரை வென்றார். பொறியியல் பட்டய படிப்பு படித்து வரும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. பொறியியல் பட்டய படிப்பு படித்து வரும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    மதுரை: விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய பொறியியல் மாணவர்..!

    17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திற்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது.

    Karthik catch18 bulls in Palamedu Jallikkattu wins car

    அதேபோல் சிறந்த காளைக்கான முதல்பரிசை பாலமேட்டைச் சேர்ந்த ஜெயராமன் பெற்றுகொண்டார். இவருக்கு பசுமாடு கன்றுடன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

    முதல்பரிசு வென்ற கருப்பாயூரணி கார்த்திக் பொறியியல் பட்டய படிப்பு படித்து வரும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    சிறுவயதிலே தனது தந்தையை இழந்து மூன்று தங்கைகளுடன் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருவதால் முதல்வர் உதவ வேண்டும் எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    English summary
    Palamedu jallikattu saw a neck and neck contest for the best bull tamer honour with Karthik from Karuppayurani in Madurai winning car.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X