மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கி.மு 2ம் நூற்றாண்டுக்கும் முந்தையது.. அதிர வைக்கும் கீழடி ஆய்வு.. மத்திய அரசு மறைக்க முயல்கிறதா?

கீழடி ஆய்வில் கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முந்தையை பொருட்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: கீழடி ஆய்வில் கிமு 2ம் நூற்றாண்டுக்கு முந்தையை பொருட்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

கீழடி, இந்த பெயர் தமிழக வரலாற்றை பல அடி உயரங்களுக்கு மேலே கொண்டே செல்ல போகிறது. கீழடியில் இதுவரை கிடைத்த தொல்பொருட்கள் எல்லாம் உலகிலேயே மிகவும் பழமையான தொல்பொருள்களில் ஒன்று.

இந்த தொல்பொருட்களை சரியாக ஆராய்ச்சி செய்தாலே பல இனங்களில் வரலாற்றை மாற்றி எழுதி முடியும். ஆனால் இதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

["அந்த" சத்தம்தான் உதவியது.. சேலம் ரயில் கொள்ளையில் 2 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்]

எப்போது தொடங்கியது

எப்போது தொடங்கியது

இந்த கீழடி ஆராய்ச்சி தொடங்கியது என்னவோ 2015ல் தான். ஆனால் தொடக்கத்தில் இருந்தே இதில் பல ஆச்சர்யங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்தது. இந்தியாவில் எங்குமே கிடைக்காத அரியவகை பொருட்கள் இங்கு கிடைத்தது. குறைந்தபட்சம், இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்ட காலம் கிமு 2ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன கிடைத்துள்ளது

என்ன கிடைத்துள்ளது

இதுவரை 6000க்கும் அதிகமான தொல்லியியல் சார்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கிறது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள் நிறைய கிடைத்து இருக்கிறது. நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

நிறைய வீடுகள்

நிறைய வீடுகள்

அதேபோல் அங்கு வீடுகள் இருந்ததற்கான அடையாளமும் இருந்துள்ளது. அதேபோல் இங்கு பல கோடி மதிப்பில் தங்கங்களும் காணப்பட்டு இருக்கிறது. 16 மீட்டர் தோண்டிய பின் இந்த தங்கம் கிடைத்துள்ளது. 50க்கும் அதிகமான சிறு சிறு ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் தெளிவாக ஆய்வு செய்ய கலிபோர்னியா எடுத்து செல்ல இருக்கிறார்கள்.

போதிய நிதி அளிக்கவில்லை

போதிய நிதி அளிக்கவில்லை

ஆனால் இந்த ஆய்வுகள் இந்த மூன்று வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 8 முறை நிறுத்தப்பட்டது. போதிய நிதி இல்லை, போதுமான ஆட்கள் இல்லை என்று பல்வேறு காரணங்களை சொல்லி ஆய்வு பணிகளை நிறுத்தி இருக்கிறார்கள். அதேபோல் வேண்டும் என்றே ஆய்வு செய்த பொருட்களை சாரியாக பராமரிக்காமல் இருந்துள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

தமிழகத்தில் ஆய்வு செய்ய நிதி இல்லை என்று கூறிய அதே மத்திய அரசுதான், ஹரியானாவில், குஜராத்திலும் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அங்கு இதுவரை பெரிய அளவில் ஆதாரம், எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் அங்கு ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சி துறை.

மாற்றினார்கள்

மாற்றினார்கள்

இந்த நிலையில்தான் கீழடி ஆராய்ச்சி அறிக்கைகளை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றது. ஆனால் மதுரை ஹைகோர்ட் பென்ச் அதை தடை செய்து, மாநில அரசுக்கே அறிக்கை விவரத்தை அளிக்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறது அதே சமயம் இந்த அறிக்கையை, ஆய்வு நடத்திய தொல்லியல் துறையை சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை தயாரிக்க கூடாது என்று மத்திய தொல்லியல் துறை பிரச்சனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தமிழர் வரலாற்றில் இந்த ஆதாரங்கள் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்தியாவில்தமிழர் இனம் எங்கு எல்லாம் பரவி இருக்கிறது என்பதை தெள்ள தெளிவாக இந்த கீழடி ஆராய்ச்சி காட்டும். அதேபோல் தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் என்பதால், இந்த ஆராய்ச்சியை மத்தியப அரசு முடக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
Keezhadi Excavation: Central Government tried to vanish the history of Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X