மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும் - மாஃபா பாண்டியராஜன்

    மதுரை: நொய்யல் நதிக்கரையின் கொடுமணல் மற்றும் சிவகாளையில் ஜனவரி 15-ந் தேதி முதல் அகழாய்வுகள் தொடங்கும் என தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    Kodumanal excavations to begin from Jan.15

    மதுரையில் கீழடியில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியை இன்று மாஃபா பாண்டியராஜன் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    கீழடியை விட கொடுமணலில் அதிகமான தொல் தமிழ் எழுத்துகள்.. கொங்கு தொன்மை அகழாய்வுக்கு வலியுறுத்தல் கீழடியை விட கொடுமணலில் அதிகமான தொல் தமிழ் எழுத்துகள்.. கொங்கு தொன்மை அகழாய்வுக்கு வலியுறுத்தல்

    கொடுமணல், சிவகாளையில் ஜனவரி 15-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 3-வது கட்ட அகழாய்வு முடிவுகள் 2வாரங்களில் கிடைக்கும்.

    ஆதி மனிதன் வாழ்ந்த நொய்யல் நதிக்கரையோரத்து கொடுமணல்... எத்தனை எத்தனை வியப்புகள்!ஆதி மனிதன் வாழ்ந்த நொய்யல் நதிக்கரையோரத்து கொடுமணல்... எத்தனை எத்தனை வியப்புகள்!

    கொந்தகையில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். ரூ12.2 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    ஆதிச்சநல்லூரில் 7-வது கட்ட அகழாய்வுகள் நடத்தப்படுகிறது. தமிழக அகழாய்வுப் பணிகளுக்கு மத்திய தொல்துறை சிறப்பான ஒத்துழைப்பு வழங்குகிறது. இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

    English summary
    Minister for Tamil Official Language and Tamil Culture K Pandiarajan said that Kodumanal excavations will begin from Jan.15.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X