மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது -கே எஸ் அழகிரி

    மதுரை: நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரான என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

    மதுரை விமான நிலையம் வந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு தமிழகத்திற்கு கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது தவறு.

    அவர் பிரச்சினையை திசை திருப்புகிறார். ஒரு திட்டத்தைக் கொண்டு வருகின்ற போது அந்தத் திட்டம் சரி இல்லை என்று சொன்னால் அந்த திட்டத்தை மாற்றிக் கொள்வது என்பதுதான் அரசாங்கத்தின் நடைமுறையாக உள்ளது.

    முரண்பாடு

    முரண்பாடு

    பத்தாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வை மாணவன் சந்திக்கிறான் பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு பொது தேர்வை மாணவன் சந்திக்கிறான் மூன்றாவதாக அவனுக்கு ஒரு தேர்வு வைப்பது என்பது தவறான ஒன்று.

    இதனுடைய விளைவு என்னவாகும் என்று சொன்னால் சமூக நீதிக்கு முற்றிலும் முரண்பாடான விஷயமாக உள்ளது.

    எம்பிபிஎஸ் சீட்

    எம்பிபிஎஸ் சீட்

    அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 சதவீத மாணவர்கள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களும் மெரீட்டில் வரவில்லை. இதனால் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள் எம்பிபிஎஸ் சீட்டை அடைய முடியாது.

    ஒரு கேள்வி கூட

    ஒரு கேள்வி கூட

    எனவே பெரும்பான்மை மக்களுக்கு பயன்படாத நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் காங்கிரஸ் திமுகவின் கொள்கை. இதற்கான உண்மை தன்மையை உணர்ந்து முதல்வர் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே தவிர அவர் ஒரு கேள்வியை கேட்க கூடாது.

    அரசாங்கத்தின் நடைமுறை

    அரசாங்கத்தின் நடைமுறை

    சமூகத்தில் பெரும்பான்மையான மாணவர்களுக்கு பயன்படாது நீட் தேர்வு. இதற்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் அந்த நேரத்தில் திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த என்று கூறுகிறார். இங்கு பல திட்ட கொண்டு வரப்பட்டு சரியில்லை என்றால் திரும்பப் பெற்றுக் கொள்வதுதான் அரசாங்கத்தின் நடைமுறை. அதைத்தான் நாங்கள் கூறுகிறோம்.

    நீட் பொருத்த வரையில்

    நீட் பொருத்த வரையில்

    எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளார். மாநிலங்கள் விரும்பாத பட்சத்தில் நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். எனவே நீட் பொருத்த வரை சமூக நீதிக்கு எதிரானது, தவறானது.

    குடும்பம்

    குடும்பம்

    ஒரு மாணவனுக்கு சுமையை ஏற்றக்கூடாது. 2 பொதுத்தேர்வுகள் போதுமானது. மூன்றாவது எதற்கு இதில் வசதியானவர்கள் பெரும் பணம் செலவு செய்து தனியார் மையங்களில் படிப்பவர்கள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். சாதாரண மக்கள் வெற்றி பெறவே முடியாது. இன்னும் 5 ஆண்டுகளில் என்ன ஆகும் என்றால் மருத்துவராகவும் பொறியாளராகவும் இருப்பவர்கள் பெரும் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் தவிர சாதாரண பாமர மக்கள், விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் அந்த தேர்வில் வெற்றி பெறவே முடியாது.

    அதிமுக அரசு

    அதிமுக அரசு

    அரசாங்க பணிகளில் அவர்களுக்கு இடம் கிடைக்காது. கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் அவர்களால் வரவே முடியாது. திரும்பவும் பழைய நிலைக்கே சென்றுவிடும். பெருந்தலைவர் காமராஜர் எப்படி இலவச கல்வி கொடுத்தார். சாதாரணமானவர்கள் உயர்ந்த நிலைக்கு ஆக்கினார். அதற்கு நேர் எதிரான நிலையை அதிமுக அரசு எடுத்துள்ளது.

    எங்கள் நிலை

    எங்கள் நிலை

    சட்டமன்றத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அதிமுக அரசு சரியாக இருந்தால் ஆதரிப்போம் நீதிக்கு எதிராக செயல்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் இதுதான் எங்களுடைய நிலை என கே எஸ் அழகிரி கூறினார்.

    English summary
    TN Congress Committee President K.S.Azhagiri says that Neet Exam is against for Social justice and it is very wrong procedure.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X