மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பாண்டியன்" ஆதரவு பாஜகவுக்கு தேவையில்லை.. மதுரையில் நின்று போட்டுடைத்த குஷ்பு!

Google Oneindia Tamil News

மதுரை: பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது பாஜக எங்கே இருக்கிறது என கேட்டநிலையில் தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது, சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

Recommended Video

    மதுரை: எதிர்க்கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை.. கிழித்து தொங்கவிட்ட குஷ்பூ..!

    மதுரை தெப்பகுளம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

    பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது, சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயாராக உள்ளேன். கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது. கமல் அறிவித்த பெண்களுக்கான அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என இல்லை எந்த கட்சியினராக இருந்தாலும் தண்டனை அளிக்க வேண்டும். திரையரங்குகளில் 50 சதவித அனுமதி என்ற அறிவிப்பால் அரசுக்கு எதிராக ரசிகர்கள் பேசத்தான் செய்வார்கள்.

    அருகதையில்லை

    அருகதையில்லை

    விதிகளின்படிதான் திரையரங்குகளில் 50சதவித மட்டுமே இடங்களுக்கான அனுமதி வழங்கப்படும். ரஜினி யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனக்கு தேவையில்லை. யாரிடமும் பாஜகவிற்கு ஆதரவு கேட்க வேண்டிய நிலை உள்ளது, எதிர்க்கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு பற்றியோ ஊழல் பற்றியோ பேச அருகதையில்லை.

    கல் எறிந்த திமுகவினர்

    கல் எறிந்த திமுகவினர்

    திமுகவில் தொண்டராக நான் இருந்தபோது எனது வீட்டில் கல் எறிந்தது குறித்து பேச முயன்றபோது கண்டுகொள்ளாத ஸ்டாலின் தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்? பெண்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்புகள் தரப்படும் என மோடி விரும்புகிறார். அதிமுக பொதுக்குழுவில் அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்ற நிலை வந்தால் பின்னர் அது குறித்து பேசலாம். திருமாவளவன் பிரபலத்திற்காக எதாவது சர்ச்சையாக பேசி வருகிறார் என்றார் குஷ்பு.

    English summary
    BJP Spokesperson Kushboo says that no need to get support of Rajini. BJP is not in the position to ask anyone's support.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X