மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையில் மீண்டும் லாக்டவுன் - மிலிட்டரி கேண்டீனில் சரக்கு ஸ்டாக் வாங்கி வைக்க குவிந்த குடிமகன்கள்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் நிலையில் குடிமகன்கள் சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைப்பதில் படுதீவிரமாக இருக்கின்றனர்.

Recommended Video

    Full lockdown districts in Tamilnadu : மதுரையில் முழு ஊரடங்கு.. எவை இயங்கும், எவை இயங்காது?

    சென்னை, மதுரை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியது. இதனால் இந்த மாவட்டங்களில் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

    இன்று நள்ளிரவு முதல் மதுரையில் முழு ஊரடங்கு.. எவை இயங்கும், எவை இயங்காது? முழு விவரம்இன்று நள்ளிரவு முதல் மதுரையில் முழு ஊரடங்கு.. எவை இயங்கும், எவை இயங்காது? முழு விவரம்

    மதுரையில் இன்று முதல் லாக்டவுன்

    மதுரையில் இன்று முதல் லாக்டவுன்

    இந்த நிலையில் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மதுரையில் 24-ந் தேதி அதிகாலை முதல் அதாவது இன்று நள்ளிரவு முதல் முழு லாக்டவுன் அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    எவை எவை இயங்காது?

    எவை எவை இயங்காது?

    மேலும் வரும் 28-ந் தேதி தீவிர லாக்டவுன் செயல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இந்த லாக்டவுன் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி கடைகள் ஆகியவை பகல் 2 மணிவரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. லாக்டவுன் காலத்தில் தேனீர் கடைகள் மூடப்பட்டிருக்கும். ஆட்டோக்கள், டாக்சிகள் எதுவும் இயங்காது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    குடிமகன்கள் உஷார்

    குடிமகன்கள் உஷார்

    இந்நிலையில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் மதுபான கடைகளும் மூடப்படுகிறது. இதனால் சரக்குகள் கிடைக்காதே என்கிற பதற்றத்தில் மதுரையில் செவ்வாய்க்கிழமையன்று தபால் தந்தி நகரில் உள்ள ராணுவ கேண்டீன் முன்பாக ஏராளமான குடிமகன்கள் குவிந்தனர். முன்னர் லாக்டவுன் போது மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் பெரும் விரக்தியில் இருந்தனர். இம்முறை ஒரு வார லாக்டவுன் என்பதால் சற்றே உஷாராகிவிட்டனர்.

    சமூக இடைவெளி எதுவும் இல்லை

    சமூக இடைவெளி எதுவும் இல்லை

    குறைந்த விலையில் கிடைக்கும் மிலிட்டரி சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்க பெருமளவில் இவர்கள் குவிந்திருந்தனர். அப்போது சமூக இடைவெளியைப் பற்றியோ, முக கவசம் அணிவது பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் சரக்குகளை வாங்குவதிலேயே குடிமகன்கள் குறியாக இருந்தனர்.

    English summary
    People gathered in large numbers outside a military canteen near Thapal Thanthi Nagar in Madurai to buy liquor on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X