மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நேரத்தில் 6 வயசு சிறுமி.. 8 வயசு பையன்.. வெறி பிடித்த இளைஞன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மதுரை நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

மதுரை: 6 வயசு பெண், 8 வயசு பையன்.. 2 பேருக்கும் ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை தந்திருக்கிறார் ஒரு இளைஞர்.. இப்போது இவரை போலீசார் தூக்கி உள்ளே வைத்திருக்கிறார்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது வில்லாபுரம்.. இங்கு பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலசுப்ரமணியன்.. இவர் அந்த பகுதியில் இருந்த ஒரு இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார்.

 lockdown crime: madurai man arrested under posco

இப்போது லாக்டவுன் என்பதால், பட்டறை மூடப்பட்டது.. அதனால் வருமானத்துக்காக சைக்கிளில் டீ விற்கிறார்.. தெரு தெருவாக டீ விற்று, அன்றைய நாளில் வரும் வருமானத்தை வைத்துதான் பிழைப்பு ஓட்டுகிறார்.

இப்படி ஒரு வறுமையில் குடும்பம் உள்ளபோது, எதிர்வீட்டு குழந்தைகளிடம் காம பார்வை வீசியுள்ளார்.. அந்த சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருந்தார்.. சம்பவத்தன்று, இவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுமி, 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.

இந்த குழந்தைகள் அடிக்கடி இவர் வீட்டுக்கு சென்று விளையாடுவார்களாம்.. அப்படி விளையாட வரும்போதெல்லாம் 2 பேருக்குமே தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மோசமாக நடந்து கொண்டுள்ளார்.. இதனால் குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.

இது சம்பந்தமாக வீட்டில் விஷயம் தெரிந்து கொதித்து போன குழந்தைகளின் தாய் அமீனா பேகம், திருப்பரங்குன்றம் மகளிர் போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசாரும் பாலசுப்ரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தற்போது அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

நாளுக்கு நாள் லாக்டவுன் கிரைம்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இதே மதுரையில் தொற்று அதிகரித்து வரும்நிலையிலும், லாக்டவுனுக்குள் லாக்டவுன் போடப்பட்ட நிலையிலும், இப்படி ஒரு குரூர செயல் நடந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

English summary
lockdown crime: madurai man arrested under posco
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X