மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஷாக்.. போதை தந்து.. ஸ்கூல், காலேஜ் மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய 3 பேர்.. மிரட்சியில் மதுரை

மாணவிகளை சீரழித்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

மதுரை: கூல் டிரிங்ஸ்-ல் போதை பொருட்களை கலந்து கொடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.. பொள்ளாச்சி சம்பவத்தை போலவே நடந்துள்ள இந்த அக்கிரமம் மதுரையை மிரள வைத்துள்ளது.

Recommended Video

    பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளிய 3 பேர்

    மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. இங்குபடித்து வரும் ஒரு மாணவிக்கு ஒரு நம்பரில் இருந்து தொடர்ந்து போன் வந்துள்ளது.. மேலும் அந்த நம்பரில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ்-களும் வந்தவண்ணம் இருந்தன. இதை பார்த்ததும் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

     lockdown crime: terror in madurai and three arrested

    அதனால் உடனடியாக நம்பருக்கு போன் செய்தார்.. எதிர்முனையில் ஒரு இளைஞர் பேசினார்.. "என்கிட்ட நிறைய பணம் இருக்கு... அதை உனக்கு தர்றேன்.. ஆனால் நான் சொல்றதை எல்லாம் நீ கேட்கணும் என்று சொல்லி உள்ளார்.. இப்படி சொன்னதும் மாணவியும் என்ன ஏதென்று விபரீதம் புரியாமல் தலையாட்டி உள்ளார்.. உடனே அந்த இளைஞர் மாணவியை, பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார்.

    அப்போதுதான் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தல்லாகுளம் போலீஸில் புகார் தந்தார்.. இதையடுத்து விசாரணை துரிதமானது.. வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் யார் என்று தேடி வந்தனர்.. இறுதியில் 3 பேரை கைது செய்தனர்.. 3 பேருமே மதுரையை சேர்ந்தவர்கள்.

    இதை பற்றி போலீசார் சொல்லும்போது, சம்பந்தப்பட்ட 3 பேரும் தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், செல்போன் கடை நடத்தி வருகிறார்கள்.. அந்த பகுதியில்தான் காலேஜும் உள்ளது.. அதனால் அங்கு படித்து வரும் மாணவிகள், ஹாஸ்டல் மாணவிகளை குறி வைத்து, அவர்களின் செல்போன் நம்பர்களையும் தேடி பிடித்துள்ளனர். இதில் காலேஜ் தவிர, ஸ்கூல் பிள்ளைகளும் அடக்கம்.

    3 பேரில் ஒருவர் செல்போன் கடை வைத்திருப்பதால், செல்போன் ரிப்பேர் என்று வரும் மாணவிகளின் நம்பர்களையும் எளிதாக எடுத்து வைத்து கொள்வார்கள்.. பிறகு குறிப்பிட்ட அந்த நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, போனிலும் பேச்சை ஆரம்பிப்பார்கள்.. சில பெண்கள் இந்த பேச்சில் விழுந்துவிட்டாலோ, அல்லது நண்பர்கள் என்று நினைத்து பழக ஆரம்பித்தாலோ அவர்களை நேரில் வரவழைத்து ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்து போய் ட்ரீட் என்ற பெயரில் விருந்து வைத்துள்ளனர்.. கை செலவுக்கு பணமும் தந்துள்ளனர்.

    இதையெல்லாம் பார்த்து சில பெண்கள் சகஜமாக பேச தொடங்கியதும், அவர்களை ஊர் ஊராக அழைத்து சென்று ஜாலியாகவும் இருந்துள்ளனர். இதன்பிறகுதான் கூல் டிரிங்ஸில் போதை மருந்துகளை திருட்டு தனமாக கலந்து தந்ததுடன், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதனையும் வீடியோவாக ரிக்கார்ட் செய்துள்ளனர்.. திரும்பவும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளனர்.

    இப்படி பல இளம்பெண்களை இவர்கள் நாசம் செய்ததாக கூறப்படுகிறது.. அது மட்டுமில்லை.. ஹாஸ்டல்லில் இருக்கும் சில மாணவிகளுக்கு சாப்பாடு பார்சல் தருவதுபோல, மது பாட்டிலையும் தந்து, அவர்களையும் தங்கள் வலையில் விழ வைத்துள்ளனர்... இப்போதைக்கு 3 பேரைதான் கைது செய்துள்ளனர்.. இன்னும் யாரெல்லாம் இதில் அடங்கி உள்ளனரோ? எத்தனை பெண்கள் சீரழிக்கப்பட்டனரோ என்ற லிஸ்ட் தயாராகி வருகிறது.

    ஜெயஸ்ரீயை மூச்சு திணற வைத்து.. கொளுத்தி கொன்ற அதிமுக பிரமுகர்களுக்கு தண்டனை தேவை: ஸ்டாலின் காட்டம்ஜெயஸ்ரீயை மூச்சு திணற வைத்து.. கொளுத்தி கொன்ற அதிமுக பிரமுகர்களுக்கு தண்டனை தேவை: ஸ்டாலின் காட்டம்

    கடந்த 3 வருஷமாகவே இந்த வேலையில்தான் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனராம்.. இப்போது லாக்டவுன் என்பதால் காலேஜ், ஹாஸ்டல் லீவு என்றாலும் போனை போட்டு அவர்களுக்கு தொல்லை தந்து வந்ததாகவும் தெரிகிறது. காலேஜ், பள்ளி மாணவிகள் எப்பவுமே சோஷியல் மீடியாவில் இருக்கவும், அவர்களை கவிழ்க்கவே காம்போ ஆபர் சலுகைகள் என்ற பெயரில் விளம்பரங்களும் செய்துள்ளனர்.

    எதிர்பார்த்தபடியே ஏராளமான பெண்கள் இவர்களை தொடர்பு கொள்ளும்போது, அவர்களையும் சிக்க வைத்து சீரழித்துள்ளனர்" என்றனர்.. பொள்ளாச்சியை போலவே நாகர்கோவில் காசி விவகாரம் வெடித்து வருகிறது.. அது சம்பந்தமான விசாரணையே இன்னும் முடிவடையாத நிலையில் இந்த மதுரை சம்பவம் மேலும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

    English summary
    lockdown crime: terror in madurai and three arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X