• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

4வதும் பொண்ணு.. எருக்கம் பால் ஊத்திட்டோம்.. அதிர வைத்த சோழவந்தான்.. சிசு கொலை!

|

மதுரை: "எங்களுக்கு பிடிக்கல... 4-வதும் பொண்ணு... அதான் சித்ரா வெளியில் போன சமயம் பார்த்து, குழந்தை வாயில எருக்கம்பாலை ஊத்தினோம்.. அது வாந்தியெடுத்தே செத்துடுச்சு.. அப்பறம் ஆத்தங்கரையோரம் போய் புதைச்சிட்டு வந்துட்டோம்" என்று பிறந்த பிசுவை கொடூரமாக கொலை செய்த பாட்டி வாக்குமூலம் தந்துள்ளார்.. இதற்கு அந்த பிஞ்சுவின் தந்தையும் உடந்தை! நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொடுஞ்செயலுக்கு திமுக எம்பி கனிமொழி, கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், இந்த பாட்டிக்கும், தந்தைக்கும் உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  Madurai : Female Baby Life Finished With Cactus Milk

  மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் தவமணி - சித்ரா தம்பதி... இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.. 10ம்தேதி சித்ராவுக்கு திரும்பவும் பிரசவம் ஆனது.. அப்போது 4-வதாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது.

  ஆனால் அடுத்த 3 நாளில் அந்த குழந்தை இறந்துவிட்டது என்று சொல்லி ஆற்றங்கரையோரம் புதைத்துவிட்டனர். விஷயம் சோழவந்தான் போலீசுக்கு தெரிந்து வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பமானது.

  முதல்ல அத்தை.. பிறகுதான் சித்தி.. இது அவருக்கு பிடிக்கலை.. அதான் சரமாரியா.. மிரள வைத்த கணேசன்!

  பாண்டியம்மாள்

  பாண்டியம்மாள்

  உடனடியாக புதைக்கப்பட்ட குழந்தை தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே அரசு டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.. இதை பார்த்து பயந்துபோன தவமணியும் அவரது அம்மாவும் போலீசில் வந்து சரணடைந்துவிட்டனர். தவமணிக்கு 33 வயது, அவரது அம்மா பாண்டியம்மாளுக்கு 55 வயது!

  பாட்டி பாண்டியம்மாள்

  பாட்டி பாண்டியம்மாள்

  இதை பற்றி பாட்டி பாண்டியம்மாள் சொல்லும்போது, "4-வதும் பொண்ணு... எங்களுக்கு இது பிடிக்கல.. 14ம் தேதி சித்ரா வெளியே போயிருந்தாள்.. அந்த நேரம் பார்த்து குழந்தைக்கு எருக்கம்பாலை ஊத்திட்டோம்.. அதை குடிச்ச குழந்தை வாந்தி எடுத்துட்டே இருந்துச்சு.. அப்படியே உயிர் போயிடுச்சு.. உடனே நாங்களும் ஏதோ திடீர்னு உடம்பு சரியில்லாத மாதிரி இறந்ததுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம்" என்றார். இதையடுத்து, குழந்தையின் அப்பா - பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

  எம்பி கனிமொழி

  எம்பி கனிமொழி

  இந்த கொடூர செயலுக்கு திமுக எம்பியும், மகளிரணி செயலாளருமான கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்த பெண்சிசு கொலை நெஞ்சை உறைய வைக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற அவலத்தை தடுக்கமுடியாமல் போவதை என்னவென்று சொல்வது? இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட சிசுவின் தந்தை, பாட்டிக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், பெண்சிசு கொலை நடக்காமல் இருக்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வரதட்சணை, ஆண் பெண் பாகுபாடு போன்ற அவலங்களை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

  பெண் சிசு கொலை

  பெண் சிசு கொலை

  20 வருடங்களுக்கு முன்பு உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பெண் சிசு கொலை அதிகமாக தலைதூக்கியது... பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புரிதல் இல்லாததால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இல்லாததால்தான் அக்குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொன்றார்கள். பிறந்த குழந்தை என்று கிடையாது, பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற பயத்தில் கூட கருக்கலைப்பு நடந்துள்ளது.. அந்த கருக்கலைப்பினால், உயிருக்கு ஆபத்தும் நிகழ்ந்திருக்கிறது.

  நடவடிக்கை

  நடவடிக்கை

  இந்த கொடூரங்களை தடுக்கதான் தொட்டில் குழந்தை திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். இதனால் பெண் சிசு கொலைகள் முழுவதுமாக தடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் தற்போது மீண்டும் மதுரை பகுதியில் தலையெடுக்க துவங்கி உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.. ஆபத்தானதும் கூட.. உடனடியாக இந்த கள்ளிப்பால், எருக்கம்பால்களுக்கு ஒரு முடிவை கட்ட வேண்டியது அவசியமானதும்கூட!!

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  lockdown crimes: four days baby killed and father and grandmother arrested for
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more