மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி!

எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை, இங்கு எப்போதும் அதிமுகதான் ஜெயிக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை, இங்கு எப்போதும் அதிமுகதான் ஜெயிக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேற்றுகள் குறித்து மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார்.

 அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி?.. ஜி.கே.மணி ஆவேசம் அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி?.. ஜி.கே.மணி ஆவேசம்

யார் அவர்

யார் அவர்

செல்லூர் ராஜு தனது பேட்டியில், அதிமுக கட்சியின் ஆரம்பகால அடிப்படை தொண்டனுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி நிச்சயமாக அதிமுக வெற்றி அடையும். கழகத்தில் அடிமட்ட தொண்டர் முனியாண்டி அவர்களுக்கு வாய்ப்பினை கொடுத்துள்ளார்கள்.

சேவை தான்

சேவை தான்

அவர் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றவர். மக்களுக்காக சேவை ஆற்றி பொது மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார். படித்தவர் பண்பாளர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பாடுபடுகின்ற ஒவ்வொரு நலன் தொண்டனுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தல்

சட்டமன்ற இடைத்தேர்தல்

சட்டமன்ற இடைத்தேர்தலில் வழிநடத்தக்கூடிய துணை முதல்வருக்கும் முதல்வருக்கும் நன்றி. மதுரையில் பாதாள சாக்கடை அமைக்கப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரத்தில் ஆய்வுகள் முடிவு பெற்று சீர்படுத்தப்படும்.

அரசியல் போட்டி

அரசியல் போட்டி

அரசியல் என்றாலே போட்டி போட்டிகள் மிகுதியாக இருக்கும். அது குறித்து எங்களுக்கு பயமில்லை. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள் மக்களுக்கான தேவைகளை அதிமுக அரசு இருக்கும். குடிமராமத்து திட்டத்தின் மூலமாக நீர்நிலைகளை முறைப்படுத்தப்பட்டது. இது தண்ணீர் பிரச்னையை போக்கியது. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலையூர் கம்மாய் சுத்தப்படுத்தி இன்று நீர் நிலைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஆசை

ஜெயலலிதா ஆசை

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கனவுத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது திருப்பரங்குன்றம் தோப்பூர் வந்துள்ளது, துணைக்கோள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை மக்கள் அவர்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வாக்களிப்பார்கள்.

English summary
Lok Sabha Election 2019: AIADMK will definitely in Thiruparankundram says minister Sellur K. Raju.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X