மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எச். ராஜாவை நான் சந்தித்தேனா? தேர்தலில் ஆதரவு அளிக்கிறேனா?.. மு.க அழகிரி அதிரடி விளக்கம்!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலாளர் எச் .ராஜாவிற்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என்று முன்னாள் திமுக எம்.பி மு.க அழகிரி விளக்கம் அளித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

மதுரை: லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பாஜக தேசிய செயலாளர் எச் .ராஜாவிற்கு தான் ஆதரவு அளிக்கவில்லை என்று முன்னாள் திமுக எம்.பி மு.க அழகிரி விளக்கம் அளித்து இருக்கிறார்.

தமிழகத்தில் பாஜக மொத்தம் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பாஜக சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில்தான் பாஜக தேசிய செயலாளர் எச் .ராஜாவிற்கு அழகிரி தேர்தலில் ஆதரவு அளிக்கிறாரா என்று பெரிய விவாதம் எழுந்துள்ளது.

காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. ராயபுரத்தில் கலகல பிரச்சாரம்!காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. ராயபுரத்தில் கலகல பிரச்சாரம்!

புகைப்படம்

புகைப்படம்

இணையத்தில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் முன்னாள் திமுக எம்.பி மு.க அழகிரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும் அது. எச்.ராஜா, அழகிரிக்கு அதில் சால்வை போற்றும்படி இருக்கும்.

வி.ஐ.பி தொகுதியாக மாறிய சிவகங்கை.. வெற்றி யாருக்கு?

பிரச்சாரம்

பிரச்சாரம்

இந்த நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் பெரிய வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியது. மு.க அழகிரி எச். ராஜாவிற்கு ஆதரவு அளிக்கிறார். அவருக்காக வாக்கு கேட்க போகிறார். திமுக வேட்பாளர்களை எதிர்த்து வாக்கு சேகரிக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது.

ஷேர் செய்தனர்

ஷேர் செய்தனர்

இந்த புகைப்படத்தை பாஜகவினர் பலர் ஷேர் செய்து இருந்தனர். அதோடு, மு.க அழகிரி பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார். திமுக போட்டியிடும் இடங்களில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வார் என்று பரபரப்பு செய்திகள் பரப்பரப்பட்டது. தற்போது அழகிரி இதுகுறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.

விளக்கம்

விளக்கம்

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலாளர் எச் .ராஜாவிற்கு தான் ஆதரவு அளிக்கவில்லை. எச்.ராஜாவும் நானும் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தைக் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதைக் கொண்டு பாஜகவிற்கு நான் ஆதரவு அளித்துள்ளேன் என்று தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். நான் யாருக்கு ஆதரவு தரவில்லை, என்னை யாரும் சந்திக்கவில்லை என்று அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Lok Sabha Elections 2019: I won't support BJP's candidate H Raja says M K Alagiri after old viral pic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X