மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் தீர்ப்பால் மகிழ்ச்சியில் தூத்துக்குடி மக்கள்!- வீடியோ

    மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி சிபிஐ வரும் 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் படி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நோய்கள் வருவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றமசாட்டினார்.

    இது தொடர்பாக போராட்டம் நடத்தி வந்த தூத்துக்குடி மக்கள் கடந்த ஆண்டு மே 22ம் தேதி 100வது நாள் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    சென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலிசென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி

    13பேர் சுட்டுக்கொலை

    13பேர் சுட்டுக்கொலை

    இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பேரணியில் பங்கேற்றவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது விசாரணையை 4 மாதத்தில் முடித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 2018 ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை விசாரணை முடியவில்லை. இதனால் கூடுதல் கால அவகாசம் கேட்டு சிபிஐ சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கை விசாரிக்க அவகாசம்

    வழக்கை விசாரிக்க அவகாசம்

    அந்த மனுவில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வந்த 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து கடந்த ஆண்டு 2018 அக்டோபர் 8-ல் முதல் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 00 பேரிடம் விசாரித்துள்ளோம். மொத்தம் 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    ஆயுதம் வைத்திருந்தார்களா?

    ஆயுதம் வைத்திருந்தார்களா?

    துப்பாக்கிச்சூடு நாளில் என்ன நடந்தது, அவற்றிற்கான காரணங்கள், அனுமதி பெறாமல் கூடியது ஏன்? அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனரா? போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டியநிலையில் சிபிஐ உள்ளது. எனவே இவற்றை விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என கூறப்பட்டது.

    செப்.15ம் தேதி அறிக்கை

    செப்.15ம் தேதி அறிக்கை

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டது. இதையடுத்து நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் இப்போது வரை எடுத்த நடவடிக்கைள் மற்றம் வழக்கின் நிலை தொடர்பாக செப்டம்பர் 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    English summary
    Madras HC madurai bench asks CBI to file Tuticorin firing report by Sep 15 after cbi asked extension time period of inquiry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X