மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை தேர்தல் அதிகாரி போஸ்ட்மேனா.. அதிகாரம் இல்லையா.. ஆணையத்துக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்

வாக்கு சாவடிக்குள் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரம் குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

    சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெறும் போஸ்ட் மேன் மட்டும்தானா. அவருக்கென்று அதிகாரம் கிடையாதா. வெறுமனே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுவதோடு அவரது வேலை முடிந்து விட்டதா என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்துள்ளது.

    மதுரை லோக்சபா தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் தேர்தல் பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாசில்தார் சம்பூர்ணம்.. ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து சென்றார். இந்த விஷயத்தை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த கட்சியினர் கண்டுபிடித்து சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு தகவல் சொன்னார்கள்.

    இதையடுத்து முதலில் இந்த விஷயத்தில் கொதித்தெழுந்தது சம்பவ இடத்துக்கு கட்சியினருடன் திரண்டது சு.வெங்கடேசன்தான்!

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு.. பதவி விலகுமாறு உத்தரவிட்ட அதிபர்.. மறுத்த ரணிலால் நியமிக்கப்பட்ட ஐஜி இலங்கை தொடர் குண்டுவெடிப்பு.. பதவி விலகுமாறு உத்தரவிட்ட அதிபர்.. மறுத்த ரணிலால் நியமிக்கப்பட்ட ஐஜி

    கலெக்டரை மாற்றுங்கள்

    கலெக்டரை மாற்றுங்கள்

    "இவ்ளோ பாதுகாப்பு இருந்தும், வாக்கு எண்ணும் மையத்துக்கு தாசில்தார் வரவேண்டிய அவசியம் என்ன? எதுக்கு வரணும்? தபால் வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் வருகிறது. அந்த ரூம் சீல் செய்யப்படவில்லை. ஆவணங்கள் இருந்த அந்த அறையின் சாவியை தந்தது யார்? அறையின் சாவியை கலெக்டருக்கு தெரியாமல் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மதுரை கலெக்டர் நடராஜனை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    சத்யபிரதா சாகு

    சத்யபிரதா சாகு

    இதையடுத்து, பெண் தாசில்தார் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், இதுசம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு கோரியும் சு.வெங்கடேசனே சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இதன் மீதான விசாரணைதான் இன்று நடைபெற்றது. இது சம்பந்தமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆஜராகியிருந்தார்.

    வாக்குசாவடி

    வாக்குசாவடி

    இதையடுத்து, இந்த வழக்கு சம்பந்தமான சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அப்போது நீதிபதிகள், வாக்குச் சாவடிக்குள் பெண் தாசில்தார் நுழைந்தது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு முழு அதிகாரம் இருக்கா, இல்லையா என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்.

    தேர்தல் அதிகாரி

    தேர்தல் அதிகாரி

    அதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, "மதுரை ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒரு தபால்காரர் தான்.. அதனால் மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது ஆணையருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது" என்று பதிலளித்தார்.

    அத்துமீறல்

    அத்துமீறல்

    ஆனால் இந்த பதிலை நீதிபதிகள் ஏற்கவில்லை. "எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள். வட்டாட்சியருக்கு உள்ள அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா? தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரியும் வேறு வேறு கிடையாது. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை தெரிந்தே மாவட்ட தேர்தல் அதிகாரி அத்துமீறி அனுமதித்துள்ளார். இப்படி இருந்தால் எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும்? என்று கேள்விகளை எழுப்பினார்கள்.

    கண்காணிப்போம்

    கண்காணிப்போம்

    அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்க முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதில் தரப்பட்டது. இந்த வாதங்களுக்குப் பிறகு இடைக்கால உத்தரவாக, மதுரை கலெக்டர் நடராஜன், தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்டு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

    English summary
    Lady officer Madurai vote counting centre issue case in Madras HC
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X