மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரிசோதனையில் மதுரை 30ஆவது இடம்.. கலெக்டரை சந்தித்த வெங்கடேசன் எம்பி... பரபர பேட்டி

Google Oneindia Tamil News

மதுரை: கொரோனா பரிசோதனையில் மதுரை 30ஆவது இடம் பிடித்துள்ள நிலையில்
மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டில் உடனடியான மாற்றம் தேவை என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியரை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை சந்தித்தனர். அதன் பின்னர் செய்தியாளரிடம் சு.வெங்கடேசன் எம்பி பேசுகையில்; "தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இதுவரை எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்று புள்ளி விபரங்களை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை அந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜூன் 7 ஆம் தேதி நிலவரப்படி இதுவரை மதுரையில் 14102 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

Madurai 30th at Covid test, Venkatesan mp meets district Collector

இந்த எண்ணிக்கை என்பது தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை விட மிகக் குறைவு. மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் பேருக்கு செய்யப்பட்ட சோதனையின் அளவு மாநில அளவில் 6420 ஆக உள்ளது. ஆனால் மதுரையின் அளவு அதில் சரிபாதியாகத்தான் உள்ளது. அதாவது 3975 மட்டுமே. பிற மாவட்டங்களை ஒப்பிட்டால் 30 ஆவது இடத்தில் மதுரை இருக்கிறது. இது மிக மிக அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது.

தென் மாவட்டங்களின் மையமாக உள்ள மதுரையில் தென் மாவட்டங்களிலே மிகக்குறைந்த அளவு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. வருவாய்த்துறை அமைச்சர் மதுரையில் ஒவ்வொருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி விட்டு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் கூறினார். அவை உண்மை என்று நாமும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு தமிழக அரசு அறிவித்துள்ள புள்ளிவிவரம் என்பது மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது. போதுமான பரிசோதனைகள் மதுரையில் எடுக்கப்படவில்லை.

எனவே மதுரை மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் நாம் எவ்வளவு பிந்தங்கியுள்ளோம் என்பதை எடுத்துக் கூறியுள்ளேன்.

கடந்த 10 நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 250 டெஸ்டுகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக மாற்றம் தேவை. கடந்த 10 நாட்களில் சுமார் பத்தாயிரம் பேர் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே இன்றிலிருந்து தினசரி 3 ஆயிரம் டெஸ்டுகள் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் எடுக்கப்படவேண்டும்.

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைய சரியா சொல்லுங்க.. தமிழக முதல்வருக்கு.. திருமாவளவன் வலியுறுத்தல்..கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைய சரியா சொல்லுங்க.. தமிழக முதல்வருக்கு.. திருமாவளவன் வலியுறுத்தல்..

Recommended Video

    சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உணவு விவரம்

    இல்லையென்றால் அடுத்து வரும் வாரங்களில் மதுரையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துவிடும். ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி தொற்று பரவலாக்கத்தை தடுப்பது தான் நோய் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கான ஒரே வழி. வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் சோதனைகள் செய்வதில் முழுவேகத்துடன் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    English summary
    Venkatesan mp meets madurai district Collector due to Madurai 30th at Covid test,. he asked there is a need for immediate change in the functioning of the district administration
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X