மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் கல்லுாரியில் ‘கிரீனி மீல்ஸ்’ அறிமுகம்.. இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் அசத்தல்..!

Google Oneindia Tamil News

மதுரை: இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைக்கடை.காம், நுாறு வகை கீரைகளை காட்சிப்படுத்தி பரவசமூட்டினர். உலகில் முதல்முறையாக மதுரை விவசாயக் கல்லூரியில் தொடங்கியது.

மதுரையில் எஸ்.எஸ்.காலனி மற்றும் கே.கே நகர் ஆகிய இரண்டு விற்பனை மையங்களைக் கொண்டு துவக்கப்பட்டுள்ளது. மதுரை வேளாண்மை கல்லுாரி, சமுதாய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்ப வணிக பொரிப்பகம், வேளாண் வணிக பொரிப்பக சங்கம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம் ஆகிவையுடன் இணைந்து கீரைக்கடை.காம், தமிழ்நாட்டின் பாரம்பரிய, ஆரோக்கிய உணவு கண்காட்சி மற்றும் பசுமை உணவை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

பசுமை உணவு லோகோவை, மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வி சேகர் அறிமுகப்படுத்தினார். வேளாண் மற்றும் உணவு பதனிடுதல் நிபுணர் மற்றும் ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் எம்.நாச்சிமுத்து முதலாவது பசுமை உணவை (கிரீனி மீல்ஸ்) துவக்கி வைத்தார்.

ஜெ. கட்டி காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கியாச்சு.. அடுத்து தமிழகம்தானே.. நடக்காது.. ஜோதிமணிஜெ. கட்டி காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கியாச்சு.. அடுத்து தமிழகம்தானே.. நடக்காது.. ஜோதிமணி

உடனடி உணவு வகை

உடனடி உணவு வகை

கீரைக்கடை.காம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பிரசாத். ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ உலகில் முதல் முறையாக உடனடி உணவு வகையாக ‘கிரீனி மீல்ஸ்' எனப்படும், பசுமை உணவை, அறிமுகம் செய்துள்ளோம். வாழைப்பூ கூட்டு, கீரைக் கூட்டு மற்றும் வாழைத்தண்டு கூட்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரூ 85

ரூ 85

எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், புதியதாக கண்டறியப்பட்ட கிரீனி மீல்ஸ், 250 கிராம், 85 ரூபாய். ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பொருட்களை உடனடியாக தயாரித்து, உடனே சமைத்து பேக்கிங் செய்கிறோம்.

பொருள்கள் இல்லை

பொருள்கள் இல்லை

உணவை பாதுகாக்கும் எவ்வித பொருட்களோ, ரசாயனமோ சேர்க்கப்படவில்லை. நான்கு மடிப்புகளைக் கொண்ட பாக்கெட்டில், சூடாக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி செய்துள்ளோம். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி, சான்றிதழ் பெற்றுள்ளோம்.

ஐரோப்பிய நாடு

ஐரோப்பிய நாடு

கிரீனி மீல்ஸ்க்கு முதன்முதலாக காப்புரிமையும் பெற்றுள்ளோம். உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கிரீனி மீல்ஸ், கிரீன் டிப் போன்றவைகளை ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம்.

அதிகாரி

அதிகாரி

கீரைக்கடை.காம் கோவை, மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட கீரை வகைகளை விற்பனை செய்து வருகிறோம். இதன் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரியாக ஜி ஸ்ரீராம் பிரசாத் மற்றும் இணை நிறுவனர், தலைமை இயக்குனராக ஸ்ரீராம் சுப்ரமணியம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

120 வகையான கீரைகள்

120 வகையான கீரைகள்

எவ்வித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கீரை பறிக்கப்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் விற்பனையாகிறது. இயற்கை வேளாண்மை முறையில், 120 வகையான கீரைகள் விளைவிக்கப்படுகின்றன.

கீரை சூப்

கீரை சூப்

சமைக்கப்பட்ட கீரைகள் மதியமும், மாலையில் கீரை சூப் வகைகளையும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2017 ல் துவக்கப்பட்ட இந்த நிறுவனம், டிசம்பர் 2017 ல் ஷோரூமை துவக்கியது. மார்ச் 2018 ல் உணவுகளை தயார் செய்தது. தற்போது, கிரீனி மீல்ஸ் துவக்கப்பட்டுள்ளது. இன்னும் பல உணவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது என்றார் அவர்.

English summary
Madurai agriculture college students introduces Green meals with 120 types of Greens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X